பிரித்தானியாவை மொத்தமாக நடுங்கவைத்த நர்ஸ் வழக்கில் அதிர்ச்சி திருப்பம்: விசாரணையில் தவறாம்
பிரித்தானியாவில் பச்சிளம் குழந்தைகளை கொடூரமாக கொலை செய்த வழக்கில் சிக்கியுள்ள நர்ஸ் தொடர்பான விசாரணையில் தவறு நடந்துள்ளதாக அரசு தரப்பு சட்டத்தரணிகள் ஒப்புக்கொண்டுள்ளனர்.
7 பச்சிளம் குழந்தைகள்
வட மேற்கு இங்கிலாந்தில் அமைந்துள்ள Countess of Chester மருத்துவமனையில் 7 பச்சிளம் குழந்தைகளை கொடூரமாக கொலை செய்தததுடன், 6 குழந்தைகளை கொலை செய்யவும் முயன்றார் Lucy Letby என்ற செவிலியர்.
பிரித்தானிய வரலாற்றிலேயே மிக மோசமான சிறார் கொலைகாரி என அடையாளப்படுத்தப்பட்ட இவர், கடந்த ஆண்டு குற்றவாளி என்று நீதிமன்றத்தால் உறுதி செய்யப்பட்டு 14 ஆயுள் தண்டனைக்கு விதிக்கப்பட்டார்.
ஆயுள் முழுவதும் சிறையில் இருக்க தீர்ப்பளிக்கப்பட்டுள்ளதால், இனி அவர் வெளியுலகம் காண வாய்ப்பில்லை என்றே கூறப்பட்டது. இந்த நிலையில், கடந்த மாதம் மான்செஸ்டர் கிரவுன் நீதிமன்றத்தில் மறுவிசாரணை முன்னெடுக்கப்பட்ட ஒரு வழக்கில், அரசு தரப்பு சட்டத்தரணி முக்கிய தகவல் ஒன்றை பதிவு செய்துள்ளார்.
அதில் செவிலியர் Lucy Letby தொடர்பான முதல் விசாரணையின் போது ஒப்படைக்கப்பட்ட ஆதாரத்தில் தவறு நடந்துள்ளதாக குறிப்பிட்டுள்ளார். அதாவது செவிலியர் Lucy Letby பணியாற்றிய வார்டில் எந்த மருத்துவர் மற்றும் செவிலிய உள்ளே சென்றனர் அல்லது வெளியேறினர் என்பது தொடர்பான தரவுகளில் தவறாக அடையாளப்படுத்தியுள்ளதாக நீதிமன்றத்தில் ஒப்புக்கொண்டுள்ளனர்.
குற்றவாளி என நீதிமன்றத்தால்
விசாரணையின் போது அரசு தரப்பு சட்டத்தரணி தெரிவிக்கையில், 2016 பிப்ரவரி 17ம் திகதி குழந்தை கெ என்பவரின் அருகே செவிலியர் Lucy Letby காணப்பட்டதாக மருத்துவர் ரவி ஜெயராமன் சாட்சியம் அளித்திருந்தார்.
அதாவது 3.50 மணிக்கு இச்சம்பவம் நடந்துள்ளது. குழந்தையை பராமரித்து வந்த செவிலியர் 3.47 மணிக்கு வெளியேறியிருந்தார். ஆனால் மறுவிசாரணையில் ஆய்வுக்கு உட்படுத்தப்பட்ட தரவில் தொடர்புடைய செவிலியர் அப்போதும் காணப்பட்டுள்ளார்.
அதாவது, சம்பவம் நடந்ததாக மருத்துவர் ரவி ஜெயராமன் பதிவு செய்த நேரத்தில் Lucy Letby அங்கே தனியாக இல்லை என்றே சட்டத்தரணிகள் குறிப்பிட்டுள்ளனர்.
மேலும், விசாரணையின் போது இந்த தவறை அரசு தரப்பும் எதிர்தரப்பும் ஒப்புக்கொண்டுள்ளது. இருப்பினும், எஞ்சிய ஆதாரங்கள் அனைத்தும் செவிலியர் Lucy Letby-க்கு எதிராக இருந்தமையால், அவர் குற்றவாளி என நீதிமன்றத்தால் அறிவிக்கப்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |