துஸ்பிரயோகத்திற்கு இலக்கான பிரித்தானிய பிரபலம்: நாடுகடத்தப்பட்ட குற்றவாளியான இந்திய இளைஞர்
பாடகியும் X Factor நட்சத்திரமுமான Lucy Spraggan துஸ்பிரயோக வழக்கு குற்றவாளியான இளைஞரை இந்தியாவுக்கு நாடுகடத்தியதாக தகவல் வெளியாகியுள்ளது.
இந்திய இளைஞர்
பாடகி லூசி ஸ்ப்ராகன் சம்பவத்தன்று பிறந்தநாள் கொண்டாட்டம் ஒன்றில் கலந்து கொண்டு ஹொட்டலுக்கு திரும்பிய நிலையில், அந்த ஹொட்டலில் போர்ட்டராக பணியாற்றி வந்த இந்திய இளைஞர் சோபி ஜான் என்பவரால் துஸ்பிரயோகம் செய்யப்பட்டார்.
@pa
2012ல் X Factor நிகழ்ச்சி பதிவு செய்யப்பட்டு வந்த போது லூசி ஸ்ப்ராகன் ஹில்டன் லண்டன் மெட்ரோபோல் ஹொட்டலில் தங்கியிருந்துள்ளார். பிறந்தநாள் கொண்டாட்டத்தில் மது அருந்தியிருந்த லூசி ஸ்ப்ராகன் அதிக போதையிலும் இருந்துள்ளார்.
இந்த நிலையில், ஹொட்டல் போர்ட்டரான சோபி ஜான் அவருக்கு உதவும் பொருட்டு, அவரை தங்கியிருந்த அறைக்கு கொண்டு சேர்த்துள்ளார். இந்த நிலையில் தூக்கத்தில் இருந்த லூசியை அப்போது 24 வயதேயான சோபி ஜான் துஸ்பிரயோகம் செய்துள்ளார்.
10 ஆண்டுகள் சிறை தண்டனை
துஸ்பிரயோகத்திற்கு இலக்காகும் போது அவருக்கு 20 வயது என்றே கூறப்படுகிறது. தொடர்ந்து சோபி ஜான் கைது செய்யப்பட்டு, 2013 ஏப்ரல் மாதம் 10 ஆண்டுகள் சிறை தண்டனையும் விதிக்கப்பட்டது.
@getty
ஆனால் 4 ஆண்டுகள் சிறை வாசத்திற்கு பிறகு, 2017 ஜனவரி 30ம் திகதி சோபி ஜான் இந்தியாவுக்கு திருப்பி அனுப்பப்பட்டதாக தற்போது தகவல் வெளியாகியுள்ளது.
இந்த விவகாரம் தொடர்பில் விளக்கமளித்துள்ள உள்விவகார அமைச்சகம், இங்கு பிரித்தானியாவில் குற்றங்களைச் செய்யும் வெளிநாட்டுப் பிரஜைகள் சட்டத்தின் முழுப் பலத்தையும் எதிர்கொள்வார்கள் என்பதுடன், விரைவில் நாடு கடத்தப்படுவதையும் அரசாங்கம் உறுதி செய்யும் என குறிப்பிட்டுள்ளனர்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |