பாயெர்ன் முனிச் கோல் மழை! ஹாட்ரிக் அடித்த வீரர்..துவம்சமான எதிரணி
பாயெர்ன் முனிச் அணி 6-1 என்ற கோல் கணக்கில் ஆர்பி லெய்ப்ஸிக் அணியை வீழ்த்தியது.
Luis diaz hat trick goal bayern munich win: அல்லியன்ஸ் அரேனாவில் நடந்த பண்டஸ்லிகா போட்டியில், பாயெர்ன் முனிச் அணி 6-1 என்ற கோல் கணக்கில் ஆர்பி லெய்ப்ஸிக் அணியை வீழ்த்தியது.
பாயெர்ன் முனிச் மற்றும் ஆர்பி லெய்ப்ஸிக் அணிகளுக்கு இடையிலான பண்டஸ்லிகா போட்டி அல்லியன்ஸ் அரேனாவில் நடந்தது.
லூயிஸ் டயஸ்
ஆட்டத்தின் 12வது நிமிடத்திலேயே பாயெர்ன் வீரர் லூயிஸ் டயஸ் (Luis Diaz) கோல் அடித்தார்.
அதனைத் தொடர்ந்து சக அணி வீரர்களான அலெக்ஸாண்டர் பாவ்லோவிக் (26), மைக்கேல் ஓலிஸ் (34) அடுத்தடுத்து கோல்கள் அடித்தனர்.
பின்னர் லூயிஸ் டயஸ் 47வது நிமிடத்தில் கோல் அடிக்க, அடுத்து 6 நிமிடங்களில் நட்சத்திர வீரர் ஹாரி கேன் கோல் அடித்தார்.

ஆட்டத்தின் 69வது நிமிடத்தில் லூயிஸ் டயஸ் ஹாட்ரிக் கோல் அடிக்க, லெய்ப்ஸிக் வீரர் 90+1வது நிமிடத்தில் அன்ரிஜா கோல் அடித்தார். இறுதியில் பாயெர்ன் முனிச் அணி 6-1 என்ற கோல் கணக்கில் அபார வெற்றி பெற்றது.
