உண்ணாவிரதப் போராட்டம்... ஸ்பெயின் கால்பந்து சங்க தலைவரின் தாயார் மருத்துவமனையில்
உதட்டு முத்த விவகாரத்தில் சிக்கிய ஸ்பெயின் கால்பந்து சங்கத்தின் தலைவர் லூயிஸ் ரூபியேல்ஸின் தாயார் தமது உண்ணாவிரதப் போராட்டத்தின் மூன்றாவது நாளில் திடீரென்று மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
உண்ணாவிரதப் போராட்டத்தில்
தமது மகனுக்கு எதிரான மனிதாபிமானமற்ற நடவடிக்கைகளுக்கு எதிராக 72 வயதான Angeles Béjar உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டு வந்தார். தேவாலயம் ஒன்றில் நுழைந்த Angeles Béjar, அங்கிருந்து வெளியேறவும் உணவருந்தவும் மறுத்துள்ளார்.
@reuters
ஸ்பெயின் மகளிர் கால்பந்து நட்சத்திரம் ஜென்னி ஹெர்மோசோவை உதட்டில் முத்தமிட்டதாக குறிப்பிட்டு பெரும் கொந்தளிப்பை எதிர்கொண்டு வருகிறார் லூயிஸ் ரூபியேல்ஸ். இந்த நிலையில் ஃபிஃபா அமைப்பும் அவரை 90 நாட்களுக்கு இடைநீக்கம் செய்து சனிக்கிழமை அறிவித்தது.
உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டிருந்த Angeles Béjar பத்திரிகையாளர்களை சந்திப்பார் என தகவல் வெளியான நிலையில், மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளார்.
தமது மகன் ஒழுக்கமான நபர்
இதனிடையே, Angeles Béjar இனி உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட வாய்ப்பில்லை எனவும், வயதானவர் என்பதால் மருத்துவமனையில் இருந்து வீட்டுக்கு திரும்புவார் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Credit: Pixel8000
முன்னதாக, தமது மகன் ஒழுக்கமான நபர் எனவும், ஒட்டுமொத்த சமூகவும் அவருக்கு என்ன செய்கிறார்கள் என்பது நியாயமில்லை எனவும் Angeles Béjar தெரிவித்திருந்தார்.
ஸ்பெயின் கால்பந்து சங்கத்தில் இருந்து எந்த காரணத்தாலும் பதவி விலகுவதாக இல்லை என அறிவித்திருந்த லூயிஸ் ரூபியேல்ஸ் தற்போது எங்கிருக்கிறார் என்பது தொடர்பில் எந்த தகவலும் இல்லை.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |