கடைசி வரை சண்டையிடுவோம்! மெஸ்ஸியுடன் புதிதாக இணைந்த 500 கோல்கள் அடித்த வீரர்
இன்டர் மியாமியில் இணைய உள்ள லூயிஸ் சுவாரஸ், 2024யில் அதிக பட்டங்களை வெல்ல வந்துள்ளதாக கூறியுள்ளார்.
லூயிஸ் சுவாரஸ்
அர்ஜென்டினா ஜாம்பவான் லியோனல் மெஸ்ஸி இன்டர் மியாமி அணியில் இணைந்து அபாரமான ஆட்டத்தினை வெளிப்படுத்தி வருகிறார்.
இந்த நிலையில் உருகுவே நட்சத்திரம் லூயிஸ் சுவாரஸ் (Luis Suarez), Gremio கிளப்பில் இருந்து இன்டர் மியாமில் இணைய உள்ளார்.
Getty Images
Free Agent ஆக இணையும் 36 வயதான சுவாரஸ் 2024 சீசனில் அதிக பட்டங்களை வென்று கொடுக்க வந்துள்ளதாக தெரிவித்துள்ளார்.
ரசிகர்கள் நம்ப வேண்டும்
மேலும் அவர் கூறுகையில், 'முந்தைய ஆண்டுகளில் ரசிகர்கள் அணியை நம்பியது போல் இப்போதும் நம்ப வேண்டும் என்று விரும்புகிறேன். நாங்கள் ஒரு சிறந்த ஆண்டை பெற போகிறோம், அதில் ரசிகர்கள் விரும்பும் அனைத்து மகிழ்ச்சியையும் அவர்களுக்கு வழங்குவோம் என்று நம்புகிறோம்.
அவர்களின் கனவுகளை நனவாக்க இறுதிவரை சண்டையிடுவோம். அதிக பட்டங்களை வெல்வது, சிறந்த விடயங்களை சாதிப்பது போன்ற அவர்களின் கனவுகளை அடைய அவர்களுக்கு உதவ நான் இங்கு வந்துள்ளேன்.
மேலும் இன்டர் மியாமி MLS-ஐ (Major League Soccer) வெல்ல போராட முடியும் இது அனைவரின் கனவாகும். திட்டம் என்னவென்றால் வெற்றி பெறுவது தான். வெற்றி பெறுவதில் உள்ள சவாலை நான் விரும்புகிறேன்' என தெரிவித்துள்ளார்.
2005ஆம் ஆண்டில் இருந்து விளையாடி வரும் சுவாரஸ் மொத்தமாக 557 கோல்கள் அடித்துள்ளார். இதில் 68 கோல்கள் அணிக்காக அடித்ததாகும்.
Getty Images
Reuters
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |