எதிர்க்கட்சியினரை கொலை செய்த பெலாரஸ் ஜனாதிபதியின் கூலிப்படை உறுப்பினர்: சுவிட்சர்லாந்தில் விசாரணை
பெலாரஸ் ஜனாதிபதியின் கூலிப்படையில் உறுப்பினராக இருந்த ஒருவர் மீது சுவிட்சர்லாந்தில் வழக்கு விசாரணை துவங்கியுள்ளது.
எதிர்த்துக் கேள்வி கேட்டால் கொலை
சில நாடுகளில், ஆட்சியாளரை எதிர்த்துக் கேள்வி கேட்டால் கொலை செய்யும் பயங்கரம் இன்றும் காணப்படுகிறது. அவ்வகையில், பெலாரஸ் நாட்டின் ஜனாதிபதியான Alexander Lukashenkoவின் கூலிப்படையினராகிய ஒருவர் மீது சுவிட்சர்லாந்தில் வழக்கு விசாரணை துவக்கப்பட்டுள்ளது.
பெலாரஸ் நாட்டின் ஜனாதிபதியான Alexander Lukashenkoவின் கூலிப்படையில் முன்னாள் உறுப்பினராக இருந்தவர் Yuri Harauski.
1999ஆம் ஆண்டு, பெலாரஸ் நாட்டின் எதிர்க்கட்சியினர் மூன்று பேரை கடத்தி கொலை செய்த விவகாரத்தில் பங்கிருப்பதாக Yuri மீது குற்றம் சாட்டப்பட்டுள்ளது.
எதனால் சுவிட்சர்லாந்தில் விசாரணை?
தன் மீதான குற்றச்சாட்டுகளை Yuri ஒப்புக்கொண்டுள்ளார். தன் நாட்டைலிருந்து தப்பி வெளியேறிய பின் சுவிட்சர்லாந்தின் St.Gallen மாகாணத்தில் 2018ஆம் ஆண்டு முதல் வாழ்ந்துவருகிறார் அவர். அவர் சுவிட்சர்லாந்தில் வாழ்வதாலேயே, அவர் மீது சுவிட்சர்லாந்தில் வழக்கு விசாரணை நடைபெறுகிறது.
தான் கடந்த காலத்தில் நடந்த சம்பவங்கள் குறித்து பேச ஒப்புக்கொண்டதையடுத்து பெலாரஸில் தன் உயிருக்கு ஆபத்து ஏற்படலாம் என்று கூறி, சுவிட்சர்லாந்தில் புகலிடம் கோரியிருந்தார் Yuri.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |