கடைசி ஓவரில் மொத்தமாக மாறிய போட்டி: வெற்றி பெற வேண்டிய நிலையில் கோட்டை விட்ட லக்னோ அணி
ஐபிஎல் போட்டியில் லக்னோ மற்றும் குஜராத்திற்கு இடையேயான போட்டியில் குஜராத் டைட்டன்ஸ் வெற்றி பெற்றுள்ளது.
குஜராத், லக்னோ போட்டி
ஐபிஎல் போட்டியின் 30வது போட்டியில் ஹர்திக் பாண்டியா தலைமையிலான குஜராத் டைட்டன்ஸ் அணியும், கேஎல் ராகுல் தலைமையிலான லக்னோ சூப்பர் ஜெயிண்ட்ஸ் அணியும் மோதின டாஸில் வெற்றி பெற்ற குஜராத் அணி முதலில் துடுப்பாட்டம் செய்தது.
@cricbuzz
தொடக்க வீரர்களாக களமிறங்கிய கில் ஆட்டமிழக்க ஹர்திக் பாண்டியா, சகா ஜோடி சிறப்பாக ஆடி ஓட்டம் சேர்த்தது.
சகா 47 ஓட்டங்களில் ஆட்டமிழக்க அதற்கு பின் ஹர்திக் பாண்டியா ஒற்றை ஆளாக நின்று ஆடி கடைசி ஓவர்களில் சிக்சர்களை விளாசினார். அதிரடியாக ஆடிய அவர் 50 பந்துகளில் 66 ஓட்டங்கள் எடுத்துள்ளார்.
135 ஓட்டங்கள் இலக்கு
கடைசில் குஜராத் அணி 6 விக்கெட் இழப்பிற்கு 135 ஓட்டங்கள் எடுத்தது. அதிகபட்சமாக ஹர்திக் பாண்டியா 66 ஓட்டங்களும், சகா 47 ஓட்டங்களும் எடுத்திருந்தனர்.
@cricbuzz
லக்னோ அணியில் சிறப்பாக பந்து வீசிய குருனால் பாண்டியா, ஸ்டோனிஸ் ஆகியோர் தலா 2 விக்கெட்டுகளை வீழ்த்தினர்.
135 ஓட்டங்கள் எடுத்தால் வெற்றி என்ற எளிய இலக்குடன் களமிறங்கிய லக்னோ அணி ஆரம்பத்தில் வேகமாக ஓட்டம் சேர்த்தது. பவர் பிளேவில் மட்டும் ஒரு விக்கெட் இழப்பிற்கு 55 ஓட்டங்கள் குவித்தது.
கடைசி ஓவரில் மாறிய போட்டி
ஒருபுறம் விக்கெட்டுகள் சரிந்து கொண்டேயிருக்க கேஎல் ராகுல் நிதானமாக ஓடி வெற்றியின் இலக்கை நோக்கி ஓட்டங்களை குவித்தார்.
கடைசி 2 ஓவரில் 17 ஓட்டங்கள் எடுத்தால் வெற்றி என்ற எளிய இலக்கை எடுக்க முடியாமல் வரிசையாக களமிறங்கிய வீரர்கள் ஆட்டமிழந்தனர்.
@cricbuzz
19 ஓவரை வீசிய முகமது சமி 5 ஓட்டங்கள் மட்டுமே கொடுத்து சிறப்பாக பந்து வீசினார். கடைசி ஓவரில் 12 ஓட்டங்கள் எடுத்தால் வெற்றி என்ற நிலையில் மோகித் சர்மா பந்து வீசினார்.
தொடர்ந்து நான்கு விக்கெட்டுகள் ஒரே ஓவரில் விழுக ஆட்டம் கடைசி நேரத்தில் குஜராத் பக்கம் திரும்பியது. கேல்ராகும் 61 பந்துகளில் 68 ஓட்டங்கள் எடுத்த நிலையில் ஆட்டமிழந்தார்.
@cricbuzz
இதனை தொடர்ந்து குஜராத் 7 ஓட்டங்கள் வித்தியாசத்தில் போட்டியில் வெற்றி பெற்றது. கடைசி ஓவரில் சிறப்பாக பந்து வீசிய மோகித் சர்மா 2 விக்கெட்டுகளையும், நூர் அகமது 2 விக்கெடுகளையும் வீழ்த்தினர்.