சொற்ப ஓட்டங்களில் சென்னையிடம் சுருண்ட லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ்: மழையால் தடையான போட்டி
சென்னை சூப்பர் கிங்ஸ் அணி மற்றும் லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணிக்கு இடையே நடைபெற்ற போட்டியில், லக்னோ 125 ஓட்டங்களை குவித்துள்ளது.
திணறிய துடுப்பாட்டக்காரர்கள்
இந்தியாவில் நடைபெறும் ஐபிஎல் போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் லக்னோ சூப்பர் ஜெயிண்ட்ஸ், ஆகிய அணிகளுக்கு இடையே இன்று போட்டி நடைபெற்று வருகிறது.
டாஸ் வென்ற சென்னை அணி முதலில் பந்து வீச்சை தேர்வு செய்தது, முதலில் களமிறங்கிய லக்னோ ஆரம்பத்திலேயே திணறியது.
சுழற் பந்து வீச்சாளர்களுக்கு மைதானம் சாதகமாக இருந்ததால் தொடக்கத்திலேயே லக்னோ விக்கெட்டுகளை இழந்தது. தொடக்க ஆட்ட காரர்களான வோக்ரா மற்றும் மேயர்ஸ் ஆகியோர் சொற்ப இலக்குகளுக்கு ஆட்டமிழந்தனர்.
மழையால் தடையான போட்டி
இதனை தொடர்ந்து களமிறங்கிய கரன் சர்மா மற்றும் குருனால் பாண்டியோ ஆகியோர் சொற்ப ஓட்டங்களில் ஆட்டமிழக்க, நிதானமாக ஆடிய ஆயுஸ் பதோனி 59 ஓட்டங்கள் எடுத்து ஆட்டமிழக்காமல் உள்ளார்.
How much love for Ayush Badoni's batting today? ?? pic.twitter.com/0RFw6r3MbE
— Lucknow Super Giants (@LucknowIPL) May 3, 2023
முதல் இன்னிங்ஸ் முடிய நான்கு பந்துகள் உள்ள நிலையில் மழையின் காரணமாக போட்டி நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.
சென்னை அணியில் சிறப்பாக பந்து வீசிய 4 ஓவர்கள் வீசி 13 ஓட்டங்கள் மட்டுமே கொடுத்து 2 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளனர். மேலும் தீக்சனா, மகேஷ் பதிரனா ஆகியோர் தலா இரண்டு விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளனர்.
Rain stops play in Lucknow ?️#LSG 125/7 after 19.2 overs.
— IndianPremierLeague (@IPL) May 3, 2023
Stay tuned for further updates.
Scorecard ▶️ https://t.co/QwaagO40CB #TATAIPL | #LSGvCSK pic.twitter.com/aGTSdMvkIj
இந்த நிலையில் மழையின் காரணமாக போட்டி நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. தற்போதைய நிலவரப்படி 19 ஓவர் 2 பந்துகள் வீசப்பட்ட நிலையில் லக்னோ அணி 7 விக்கெட் இழப்பிற்கு 125 ஓட்டங்கள் குவித்துள்ளது.