ஹைதராபாத் அணியின் பந்து வீச்சை தும்சம் செய்த நிக்லஸ் பூரான்! லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அபார வெற்றி
இந்தியாவில் நடைபெற்று வரும் ஐபிஎல் போட்டியில், சன்ரைசர்ஸ் மற்றும் லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணியினருக்கு இடையேயான போட்டியில் லக்னோ வெற்றி பெற்றுள்ளது.
லக்னோ- ஹைதராபாத் மோதல்
இந்தியாவில் நடைபெற்று வரும் ஐபிஎல் போட்டியில், 58வது ஆட்டத்தில் இன்று லக்னோ மற்றும் ஹைதராபாத் அணிகள் மோதின. ஹைதராபாத்தின் நடைபெற்ற இப்போட்டியில் முதலில் களமிறங்கிய சன்ரைசர்ஸ் அணி தொடக்கத்திலே கொஞ்சம் தடுமாறியது.
தொடக்க ஆட்டகாரர்களான அபிசேக் ஆட்டமிழக்க திருப்பாத்தியும், அன்மோல்ப்ர்த் சிங்கும் இணைந்து ஓட்டங்கள் சேர்ந்தனர். இதனை தொடர்ந்து இவர்களது கூட்டணி பிரிய, அணி 12 ஓவர் முடிவில் 115 ஓட்டங்கள் குவித்து 5 விக்கெட்டுகளை இழந்து இருந்தது.
HK & Samad's 5⃣8⃣-run partnership helps us reach 182/6 ?
— SunRisers Hyderabad (@SunRisers) May 13, 2023
Geared up to reply with the ball ? pic.twitter.com/azWRf2Zypl
இதனை தொடர்ந்து அதிரடியாக ஆடிய கிளாசென் 29 பந்துகளில் 47 ஓட்டங்களை குவித்தார். மேலும் அப்துல் சமத் 25 பந்துகளில் 37 ஓட்டங்கள் அடித்தார். ஹைதராபாத் அணி 20 ஓவர் முடிவில் அணி மொத்தம் 6 விக்கெட் இழப்பிற்கு 182 ஓட்டங்கள் குவித்தது.
சுமாரான தொடக்கம்
இந்நிலையில் 183 ஓட்டங்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய லக்னோ அணியின் தொடக்க ஆட்டக்காரர் கெய்ல் மேயர்ஸ், 14 பந்துகளை சந்தித்து 2 ஓட்டங்கள் எடுத்து ஆட்டமிழந்தார்.
அவருடன் களமிறங்கிய டீ காக் சிறிது நேரம் சிறப்பாக ஆடினால், ரொம்ப நேரம் ஆட்டம் தாக்குப் பிடிக்கவில்லை. இதனை தொடர்ந்து களமிறங்கிய இளம் வீரரான மன்கட் மற்றும் ஸ்டோனிஸ் ஆகியோர் நிதானமாக ஆடி ஓட்டங்களை சேர்த்தன.
பூரானின் ருத்ர தாண்டவம்
இதனை தொடர்ந்து 40 ஓட்டங்கள் குவித்திருந்த நிலையில் ஸ்டோனிஸ் ஆட்டமிழக்க, அடுத்து வந்த நிக்லஸ் பூரான் ஆரம்பம் முதலே ருத்ர தாண்டவம் ஆடினார்.
தோற்கும் நிலையிலிருந்த அணியை பூரான் சிக்சர்கள் மற்றும் பவுண்டரிகளாக அடித்து ஜெயிக்க வைத்தார். சிறப்பாக துடுப்பாட்டம் ஆடிய பிரிரக் மன்கட் 45 பந்துகள் 64 ஓட்டங்கள் குவித்தார்.
P???ran from Ball 1. ?pic.twitter.com/Ds5iv7PIKC
— Lucknow Super Giants (@LucknowIPL) May 13, 2023
பூரான் வெறும் 13 பந்துகளில் 44 ஓட்டங்களை எடுத்து, லக்னோ அணியை வெற்றிப் பாதைக்கு அழைத்து சென்றார். இதனை தொடர்ந்து லக்னோ அரையிறுதி செல்லும் வாய்ப்பும் இன்னும் இருப்பதாக தெரியவந்துள்ளது.
That winning feeling! ?
— IndianPremierLeague (@IPL) May 13, 2023
A superb chase from @LucknowIPL ??#TATAIPL | #SRHvLSG pic.twitter.com/xWHS0yy6sQ