மைதானத்திற்குள் வந்த ஆம்புலன்ஸ்: ஸ்ட்ரெட்சரில் கொண்டுசெல்லப்பட்ட வீரர்..என்ன ஆனது?
டெல்லி கேபிட்டல்ஸ் வீரர் லுங்கி இங்கிடி பலத்த காயமடைந்தது மைதானத்தில் பரபரப்பை ஏற்படுத்தியது.
டெல்லி 264 ஓட்டங்கள்
டெல்லி கேபிட்டல்ஸ் மற்றும் பஞ்சாப் கிங்ஸ் அணிகள் மோதிய போட்டி அருண் ஜெய்ட்லி மைதானத்தில் நடந்தது.
#LungiNgidi may leave the match that’s really tough 😮#DCvsPBKS pic.twitter.com/ZaqLTBGUqx
— Nagarjuna (@nagarjunaa_m) April 25, 2026
முதலில் ஆடிய டெல்லி அணி 264 ஓட்டங்கள் குவித்தது. கே.எல்.ராகுல் 152 ஓட்டங்களும், நிதிஷ் ராணா 91 ஓட்டங்களும் விளாசினர்.
பின்னர் கடினமான இலக்கை நோக்கி பஞ்சாப் கிங்ஸ் அணி களமிறங்கியது. எனினும் தொடக்க ஜோடியான ப்ரியான்ஷ் ஆர்யா, பிரப்சிம்ரன் சிங் ருத்ரதாண்டவம் ஆடியது.
பலத்த அடி
ஆட்டத்தின் ஒரு கட்டத்தில் கேட்ச் செய்ய முயன்ற டெல்லி லுங்கி இங்கிடி நிலைதடுமாறி கீழே விழுந்தார். இதில் அவருக்கு தலையில் பலத்த அடிபட்டது.

அவர் நகர முடியாமல் அப்படியே படுத்துவிட, உடனடியாக மைதானத்திற்குள் ஆம்புலன்ஸ் கொண்டு வரப்பட்டது.
பின் இங்கிடி ஸ்ட்ரெட்சர் மூலம் ஆம்புலன்சில் ஏற்றப்பட்டார். அவருக்கு உடனடியாக முதலுதவி அளிக்கப்பட்டது. இந்நிகழ்வு பார்வையாளர்கள் உட்பட வீரர்களுக்கும் சற்று பதற்றத்தை ஏற்படுத்தியது.
[H0YFTI ]

| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |