இதையெல்லாம் செய்தால் நுரையீரலில் பிரச்சனையே வராது! அதுவே மாத்தி செய்தால் அவ்ளோ தான்
கொரோனா தொற்று பரவத் தொடங்கியதிலிருந்தே நுரையீரல் மீதான அக்கறை அதிகரித்துவிட்டது. நுரையீரலை பாதுகாக்க மக்கள் பல்வேறு விடயங்களை கடைபிடித்து வருகின்றனர்.
உலக சுகாதார அமைப்பின் கூற்றுப்படி, நாள்பட்ட நுரையீரல் தடுப்பு நோய், குறைந்த சுவாச நோய்த்தொற்று மற்றும் நுரையீரல் புற்றுநோய் ஆகியவை உலகின் இறப்புக்கான முதல் 10 முக்கிய காரணங்களில் இருக்கின்றன.
புகைப்பிடிப்பது
நுரையீரல் பாதுகாப்பு என்று வரும்போது முதலில் நாம் கடைபிடிக்க வேண்டியது சிகரெட் பழக்கத்தை கைவிடுவதுதான். இதை மருத்துவர்களும் வலியுறுத்துகின்றனர். ஏனெனில் சிகரெட் பிடிப்பது காற்றின் பாதையை சுருக்கி சுவாசிப்பதில் சிரமத்திற்கு வழிவகுக்கிறது. இது மட்டுமல்ல, இது நாள்பட்ட வீக்கம் அல்லது நுரையீரலில் வீக்கத்தை ஏற்படுத்துகிறது. இது நாள்பட்ட மூச்சுக்குழாய் அழற்சிக்கு வழிவகுக்கும்.
சுவாச பயிற்சி
உங்கள் நுரையீரல் திறனை மேம்படுத்த பல யோகா ஆசனங்கள் உள்ளன. யோகா ஆசனங்கள் மட்டுமல்ல, diaphragmatic breathing, pursed-lips breathing போன்ற பல பயிற்சிகள் உள்ளன, அவை நுரையீரல் திறனை பராமரிக்க உதவுகின்றன.
தடுப்பூசி அவசியம்
காய்ச்சல் மற்றும் நிமோனியாவிற்கான முக்கியமான தடுப்பூசிகளை எடுத்துக்கொள்வதில் தாமதம் காட்டாதீர்கள். ஏனெனில் இவை நுரையீரல் தொற்றுகளைத் தடுக்கவும் நுரையீரல் ஆரோக்கியத்தை மேம்படுத்தவும் உதவுகின்றன.
வீட்டின் உட்புற காற்றின் தரம்
தற்போதைய சூழலில் வீட்டின் உட்புற காற்றும் தூய்மையானதாக இல்லை. எனவே காற்றை சுத்தீகரிக்கும் இயந்திரங்களை பயன்படுத்துங்கள் அல்லது காற்றை சுத்தப்படுத்தும் இண்டோர் செடிகளை வளர்க்கலாம். இந்த இயற்கையான சூழல் மன அமைதியையும் உண்டாகும்.