பிரித்தானியாவின் கொடூர இளைஞருக்கு அளிக்கப்பட்ட தண்டனை: முழுமையான பின்னணி
பிரித்தானியாவில் பாடசாலை ஒன்றில் பெரும் அசம்பாவிதம் நடத்த திட்டமிட்ட இளைஞர் ஒருவர் சொந்த குடும்ப உறுப்பினர்கள் மூவரை துப்பாக்கியால் கொலை செய்த சம்பவத்தில் தண்டனைப் பெற்றுள்ளார்.
குடியிருப்பில் வைத்து படுகொலை
குறைந்தபட்சம் 49 ஆண்டுகள் அந்த இளைஞருக்கு தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. நிக்கோலஸ் ப்ராஸ்பர் என்ற அந்த 19 வயது இளைஞர் தமது தாயாரான 48 வயது ஜூலியானா பால்கன், சகோதரர் 16 வயது கைல், 13 வயதேயான சகோதரி கிசெல்லே ஆகியோரை கடந்த ஆண்டு செப்டம்பர் 13 ம் திகதி லூட்டனில் உள்ள அவர்களின் குடியிருப்பில் வைத்து படுகொலை செய்துள்ளார்.
கொலைகள் நடந்த சில மணிநேரங்களுக்குப் பிறகு, தனது முன்னாள் தொடக்கப் பள்ளிக்குச் செல்லும் வழியில் ப்ராஸ்பர் கைது செய்யப்பட்டான். அங்கு அவர் இளம் சிறார்கள் மற்றும் ஆசிரியர்களை கொல்ல திட்டமிட்டது விசாரணையில் அம்பலமானது.
லூட்டன் கிரவுன் நீதிமன்றத்தில், நீதிபதி சீமா-க்ரப் ப்ராஸ்பரிடம் தெரிவிக்கையில், உங்கள் லட்சியம் புகழைப் பெறுவதாகும், மரணத்திற்கு பிறகும், 21 ஆம் நூற்றாண்டின் உலகிலேயே மிகவும் கொடூரமான பாடசாலை துப்பாக்கிச் சூடு சம்பவத்தால் அறியப்பட விரும்பினீர்கள் என குறிப்பிட்டுள்ளார்.
அந்த கொடூரத் திட்டத்தை முன்னெடுக்க, நீங்கள் உங்கள் குடும்ப உறுப்பினர்களை படுகொலை செய்துள்ளீர்கள் எனவும் நீதிபதி குறிப்பிட்டுள்ளார். ப்ராஸ்பரின் திட்டம் நிறைவேறியிருந்தால் மொத்தமாக 34 பேர்கள் கொல்லப்பட்டிருப்பார்கள் என்றே கூறப்படுகிறது.
விடுவிக்கப்படாமல் போகலாம்
அவரது குடும்பம், அதைத் தொடர்ந்து அவரது பழைய பள்ளியில் நான்கு வயது நிரம்பிய சிறார்கள், இரண்டு ஆசிரியர்கள், பின்னர், இறுதியாக, அவர். தாயார் உட்பட குடும்பத்தினரை கொலை செய்த பிறகு ப்ராஸ்பர் எழுதிய குறிப்பில்,
நான் அவர்களைத் தூக்கத்தில் கொன்றிருந்தால் யாரும் காவல்துறைக்கு தகவல் அளித்திருக்க மாட்டார்கள் என்று நான் கணித்தது சரிதான் என குறிப்பிட்டுள்ளார். நீதிபதி குறிப்பிடுகையில், சமூகத்திற்கு மிக ஆபத்தான நபராக அடையாளப்படுத்தப்பட்டுள்ளதால், ஒருவேளை நீங்கள் ஒருபோதும் விடுவிக்கப்படாமல் போகலாம் என தெரிவித்துள்ளார்.
கொலை சம்பவத்தை அடுத்து தகவல் அறிந்த அதிகாரிகள் அவரது குடியிருப்புக்குள் வலுக்கட்டாயமாக நுழைந்தபோது, சுட்டுக் கொல்லப்பட்ட அவரது குடும்பத்தினரின் உடல்களைக் கண்டனர். அவரது சகோதரருக்கு 100க்கும் மேற்பட்ட கத்திக் காயங்கள் ஏற்பட்டிருந்தன.
இந்த நிலையில், அவருக்கு ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டு, குறைந்தபட்சம் 49 ஆண்டுகள் சிறைத்தண்டனை அனுபவிக்க நேரிடும் என்று கூறப்பட்டது. அவர் ஏற்கனவே சிறையில் இருந்த காலம் கழிக்கப்பட்டதை அடுத்து, அவர் 48 ஆண்டுகள் 177 நாட்கள் சிறையில் இருப்பார் என்ற தகவல் வெளியாகியுள்ளது.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |