பிரான்ஸ் தலைநகரில் இளம் வயதில் மரணமடைந்த இளவரசர்: தந்தை வெளியிட்டுள்ள துயரச் செய்தி
இளவரசர் ஒருவர் அரிய நோய் ஒன்றினால், பிரான்ஸ் தலைநகர் பாரீஸில் மரணமடைந்துள்ளதாக அவரது குடும்பத்தினர் தெரிவித்துள்ளார்கள்.
இளம் வயதில் மரணமடைந்த இளவரசர்
லக்சம்பர்க் இளவரசரான பிரெட்ரிக், அரிய வகை மரபியல் நோய் ஒன்றின் காரணமாக உயிரிழந்துவிட்டதாக அவரது தந்தையான இளவரசர் ராபர்ட் தெரிவித்துள்ளார்.
ராபர்ட் தனது சமூக ஊடகப்பக்கத்தில் வெளியிட்டுள்ள செய்தியில், நானும் என் மனைவியும், எங்கள் மகன் மரணமடைந்த செய்தியை மிகவும் கனத்த இதயத்துடன் தெரிவித்துக்கொள்கிறோம் என்று குறிப்பிட்டுள்ளார். இளவரசர் பிரெட்ரிக்குக்கு வயது 22 மட்டுமே!
இளவரசர் பிரெட்ரிக்குக்கு 14 வயதில், polymerase gamma protein mitochondrial disease என்னும் அரிய மரபியல் நோய் கண்டுபிடிக்கப்பட்ட நிலையில், அவரது உடல் நிலை நாளுக்குநாள் மோசமாகிக்கொண்டே வந்தது.
பிப்ரவரி மாதம் 28ஆம் திகதி தன் குடும்பத்தினர் அனைவரையும் தனது அறைக்கு அழைத்த தங்கள் மகன் பிரெட்ரிக், அவர்கள் அனைவரிடமும் விடைபெற்றுக்கொண்டதாக தெரிவித்துள்ள ராபர்ட், மார்ச் மாதம் 1ஆம் திகதி, அவர் மரணமடைந்ததாக தெரிவித்துள்ளார்.
பிரெட்ரிக்கின் தாயாகிய இளவரசி ஜூலி, 15 ஆண்டுகளாக தன் மகனை விட்டு அக்கம்பக்கம் விலகாமல் அவரை கண்ணும் கருத்துமாக கவனித்துக்கொண்டது குறிப்பிடத்தக்கது.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |