'அதிக ஊதியம்... பிரமாண்ட வீடு'.. IAS ஊழியர்களின் சொகுசு வாழ்க்கை.. இவ்வளவு சலுகைகளா?
இந்தியாவில் மிகவும் விரும்பப்படும் சேவைகளின் ஒன்று IAS. இது நாட்டின் கடினமான மற்றும் மிகவும் போட்டித் தேர்வுகளில் ஒன்றாகும்.
இந்த அதிகாரியின் பொறுப்பானது பொது நிர்வாகத் துறையில் பணியாற்றுவதும், அரசின் கொள்கைகள் மற்றும் திட்டங்களை பல்வேறு நிலைகளில் செயல்படுத்துவதும் ஆகும்.
மத்திய, மாநில அரசுகளின் பல்வேறு துறைகள் மற்றும் அமைச்சகங்களில் மாவட்ட ஆட்சியர், கோட்ட ஆணையர், செயலர், இணைச் செயலர், கூடுதல் செயலர், தலைமைச் செயலர், கேபினட் செயலர் போன்ற பதவிகளில் IAS அதிகாரிகள் நியமிக்கப்படலாம்.
இவ்வளவு முக்கியமான பதவிகளில் இருக்கும் இவர்களுக்கு எவ்வாறான சம்பளம் மற்றும் சலுகைகள் அரசாங்கத்தினால் வழங்கப்படும் என அனைவரும் யோசித்து இருப்பீர்கள்.
ஆகவே இந்த பதிவில் ஒரு IAS ஊழியர்களுக்கு வழங்கப்படும் சம்பளம் மற்றும் சலுகைகள் பற்றி இந்த பதிவில் பார்க்கலாம்.
IAS அதிகாரிகளின் சம்பளம் மற்றும் சலுகைகள்
ராஜஸ்தானில் மாவட்ட ஆட்சியர்கள் ரூ.1.34 லட்சம் முதல் 1.5 லட்சம் வரை சம்பளம் கிடைகிறது.
சம்பளம் தவிர, அரசு வீடு மற்றும் கார், ஓட்டுநர் மற்றும் வீட்டு வேலைக்கு ஆட்கள் என அனைத்தும் கிடைக்கும்.
வீட்டுத் தோட்டத்தைப் பராமரிக்க ஒரு தோட்டக்காரரையும் பெற்றுக்கொள்கிறார்கள்.
மேலும் இவர்களுக்கு பல வகையான சலுகைகள் காணப்படுகின்றன.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |