அமெரிக்காவில் மன்னர் சார்லஸ் பெயரில் ஒரு ஆடம்பர குடியிருப்பு: என்ன, மன்னருக்கே தெரியாதா?
பிரித்தானிய மன்னர் பெயரில், அமெரிக்காவில் ஆடம்பர குடியிருப்பு ஒன்று வாங்கப்பட்டுள்ளது. ஆனால், அது குறித்து மன்னருக்கே தெரியுமா என்பது சந்தேகமே!
மன்னர் சார்லஸ் பெயரில் வாங்கப்படுள்ள ஆடம்பர குடியிருப்பு
அமெரிக்காவின் நியூயார்க் நகரில் அமைந்துள்ள ஆடம்பர குடியிருப்பு ஒன்றில், மன்னர் சார்லஸ் பெயரில் மூன்று படுக்கையறைகள் கொண்ட வீடு ஒன்று வாங்கப்பட்டுள்ளது.
Image: (Image: Mediumdrumworld)
கோல்ப் விளையாடும் வசதி மற்றும் நீச்சல் குளம், உடற்பயிற்சிக்கூடம் போன்ற வசதிகள் கொண்ட அந்த வீட்டின் விலை 5.4 மில்லியன் பவுண்டுகள் ஆகும்.
மன்னருக்கே தெரியாதா?
அந்த வீடு மன்னர் சார்லஸ் பெயரில் வாங்கப்பட்டாலும், அது அவருக்காக வாங்கப்படவில்லை.
Image: (Image: Mediumdrumworld)
அந்த வீடு, அமெரிக்காவுக்கான கனேடிய தூதருக்கான அதிகாரப்பூர்வ வீடாக மாற்றப்பட உள்ளது.
கனடா காமன்வெல்த் நாடு ஆகும். மன்னர் சார்லஸ்தான் கனடாவுக்கும் மன்னர் என்பதை பலரும் அறிந்திருக்கலாம்.
ஆகவேதான், கனடாவின் தூதருக்கான அந்த வீட்டை, மன்னர் பேரில் கனடா அரசு வாங்கியுள்ளது!
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |