தமிழக வீரர் அஸ்வினின் சாதனையை முந்திய அவுஸ்திரேலியர்!
டெஸ்ட் கிரிக்கெட்டில் அதிக விக்கெட்டுகளை வீழ்த்தியவர்கள் பட்டியலில் நாதன் லயன் தமிழக வீரர் அஸ்வினை பின்னுக்கு தள்ளியுள்ளார்.
நாதன் லயன்
மேற்கிந்திய தீவுகளுக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் அவுஸ்திரேலிய அணி 164 ஓட்டங்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இந்த போட்டியில் அவுஸ்திரேலிய சுழற்பந்துவீச்சாளர் நாதன் லயன் 8 விக்கெட்டுகளை கைப்பற்றினார்.
முதல் இன்னிங்ஸில் 2 விக்கெட்டுகளை வீழ்த்திய நாதன் லயன், இரண்டாவது இன்னிங்ஸில் 6 விக்கெட்டுகளை கைப்பற்றி அசத்தினார்.
@ICC/Twitter
அஸ்வினுக்கு 9வது இடம்
இதன்மூலம் டெஸ்ட் கிரிக்கெட்டில் அதிக விக்கெட்டுகளை வீழ்த்தியவர்கள் பட்டியலில் 8வது இடத்தில் உள்ள அஸ்வினை பின்னுக்கு தள்ளினார். தமிழக வீரர் அஸ்வின் 442 விக்கெட்டுகள் வீழ்த்தியுள்ள நிலையில், லயன் 446 விக்கெட்டுகளை கைப்பற்றியுள்ளார்.
இலங்கையின் முத்தையா முரளிதரன் (800), அவுஸ்திரேலியாவின் ஷேன் வார்னே (708), இங்கிலாந்தின் ஜேம்ஸ் ஆண்டர்சன் (668) ஆகியோர் இந்தப் பட்டியலில் முதல் மூன்று இடங்களில் உள்ளனர்.
@AP Photo
அவுஸ்திரேலியா மற்றும் மேற்கிந்திய தீவுகளுக்கு இடையிலான இரண்டாவது மற்றும் கடைசி டெஸ்ட் போட்டி, வரும் 8ஆம் திகதி அடிலெய்டு ஓவல் மைதானத்தில் நடைபெற உள்ளது.