அமெரிக்காவில் இருந்துகொன்டே E-Office வழியே அரசுப்பணி செய்யும் மு.க.ஸ்டாலின்!
தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அமெரிக்கா சென்றுள்ள நிலையில் அங்கிருந்தே E-Office வழியே அரசுப்பணியை மேற்கொண்டு வருகிறார்.
E-Office வழியே அரசுப்பணி
தமிழ்நாடு மாநிலம், 2030-ம் ஆண்டுக்குள் 1 டிரில்லியன் டாலர் பொருளாதார வளர்ச்சி அடையவேண்டும் என்ற இலக்குடன் தமிழக முதலமைச்சர் பல்வேறு பணிகளை மேற்கொண்டு வருகிறார்.
அந்தவகையில், பல்வேறு முதலீடுகளை ஈர்ப்பதற்காக ஆகஸ்ட் 27 -ம் திகதி தமிழக முதலமைச்சர் அமெரிக்காவுக்கு சென்றார்.
அங்கு, சான் பிரான்சிஸ்கோ மாநகரில் மைக்ரோசாப்ட் (Microsoft), மற்றும் கூகுள் (Google) நிறுவனங்களுடன் ஒப்பந்தம் கையெழுத்தானது.
மேலும், சிகோகா நகரில் ஈட்டன், அஷ்யூரன்ட், டிரில்லியன்ட் ஆகிய நிறுவனங்களுடன் ஒப்பந்தம் கையெழுத்தானது.
மொத்தம் 17 நாட்கள் அமெரிக்க பயணம் மேற்கொண்ட மு.க.ஸ்டாலின் வரும் 17-ம் திகதி தமிழகம் திரும்புகிறார்.
இந்நிலையில், அங்கிருந்து E-Office வழியே அரசுப்பணியை மேற்கொண்டு வருகிறார். அவர் தனது ட்விட்டர் எக்ஸ் தளத்தில், "அறிவியல் மற்றும் தொழில்நுட்ப வளர்ச்சிகள், உலகை உள்ளங்கைக்குள் கொண்டு வந்திருக்கின்றன. அயலக மண்ணிலும், அரசுக் கோப்புகள் தேங்கிடாமல் இ-ஆபீஸ் வழியே பணி தொடர்கிறது" என பதிவிட்டுள்ளார்
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |