சீமானுக்காக குரல் கொடுத்த தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின்: கழுத்தை நெரிப்பது அறம் அல்ல என பதிவு
நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமானின் ட்விட்டர் கணக்கு முடக்கப்பட்டதை, தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் கண்டித்துள்ளார்.
சீமானின் ட்விட்டர் கணக்கு
இந்தியாவில் நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமானின் ட்விட்டர் கணக்கு தடை செய்யப்பட்டுள்ளது. சட்ட கோரிக்கைக்கு ஏற்ப இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டதாக கூறப்படுவது கட்சி தொண்டர்கள் இடையே கொந்தளிப்பை ஏற்படுத்தியது.
அதே போல் நாம் தமிழர் கட்சியின் நிர்வாகிகள் 20 பேரின் கணக்குகளும் தற்காலிகமாக தடை செய்யப்பட்டுள்ளது. இந்திய தொழில்நுட்ப சட்ட விதிகளை அவர்கள் மீறியதாக குற்றம்சாட்டப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
தமிழக முதல்வர் கண்டனம்
இந்த நிலையில், தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் இதற்கு கண்டனம் தெரிவித்து ட்வீட் செய்துள்ளார். அவர் வெளியிட்டுள்ள பதிவில்,
'நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் திரு. சீமான், மே 17 இயக்க ஒருங்கிணைப்பாளர் சகோதரர் திரு. திருமுருகன் காந்தி உள்ளிட்டோரது ட்விட்டர் கணக்குகள் இந்தியாவில் முடக்கப்பட்டிருப்பது கண்டனத்திற்குரியது.
கருத்துக்களை கருத்துக்களால் எதிர்கொள்வதே அறம். கழுத்தை நெரிப்பது அல்ல. ட்விட்டர் முடக்கத்தை விலக்கிச் சமூக வலைத்தளத்தை அதற்கான தரத்துடன் செயல்பட அனுமதிக்க வேண்டும்!' என கூறியுள்ளார்.
நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் திரு. சீமான், மே 17 இயக்க ஒருங்கிணைப்பாளர் சகோதரர் திரு. திருமுருகன் காந்தி உள்ளிட்டோரது ட்விட்டர் கணக்குகள் இந்தியாவில் முடக்கப்பட்டிருப்பது கண்டனத்திற்குரியது.
— M.K.Stalin (@mkstalin) June 1, 2023
கருத்துகளை கருத்துகளால் எதிர்கொள்வதே அறம். கழுத்தை நெரிப்பது அல்ல.…