தோனி எனக்கு நெருங்கிய நண்பர் இல்லை..!மனம் திறந்த அதிரடி மன்னன் யுவராஜ் சிங்
நானும், தோனியும் நெருங்கிய நண்பர்கள் கிடையாது என இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் அதிரடி வீரர் யுவராஜ் சிங் தெரிவித்துள்ளார்.
2011 உலக கோப்பை
இந்திய கிரிக்கெட் ரசிகர்களை கடந்த கால கட்டங்களில் அதிகம் ஈர்த்த ஜோடி என்றால் தோனி-யுவராஜ் இணையை சொல்லலாம்.
2011 உலக கோப்பையை இந்திய அணி வெல்வதற்கு தோனியின் கேப்டன்சி எவ்வளவு முக்கியமானதாக இருந்ததோ, அதே அளவுக்கு தொடர் முழுவதும் யுவராஜ் சிங்கின் ஆல்-ரவுண்ட் விளையாட்டு மிகவும் முக்கியமானது.
விளையாட்டு மைதானத்தில் மட்டும் இன்றி வெளி நிகழ்ச்சிகளில் கலந்து கொள்ளும் போதும் யுவராஜ் சிங்கும், தோனியும் மிகவும் நட்புறவுடன் இருப்பதாகவே ரசிகர்கள் எண்ணி வந்தனர்.
ஆனால் தோனியுடனான நட்புறவு குறித்து யுவராஜ் சிங் மனம் திறந்து பேசியுள்ளார்.
மனம் திறந்த யுவராஜ் சிங்
அதில், இந்திய அணியின் முன்னாள் கேப்டன் தோனியும், நானும் நெருங்கிய நண்பர்களாக இருந்தது இல்லை.
நாட்டுக்காக கிரிக்கெட் விளையாடும் போது மட்டுமே மைதானத்தில் நண்பர்களாக இருந்தோம் என யுவராஜ் சிங் தெரிவித்துள்ளார்.
யுவராஜ் சிங்கின் கருத்து இந்திய கிரிக்கெட் ரசிகர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |