M9 நெடுஞ்சாலையில் நிகழ்ந்த சாலை விபத்து: திருமணத்திற்கு சென்ற 5 இளைஞர் பரிதாபமாக உயிரிழப்பு
M9 Highway Accident 5 teen dead: அயர்லாந்தில் கில்டேர் மாகாணத்தில் நடந்த சாலை விபத்தில் M9 நெடுஞ்சாலையில் ஏற்பட்ட சாலை விபத்தில் 5 இளைஞர் பரிதாபமாக உயிரிழந்துள்ளனர்.
சாலை விபத்து
அயர்லாந்தின் கில்டேர் மாகாணத்தில் உள்ள M9 நெடுஞ்சாலையில் எதிர் திசையில் வந்த கார் மோதியதில் இங்கிலாந்தில் திருமணத்திற்கு சென்ற 5 இளைஞர் பரிதாபமாக உயிரிழந்துள்ளனர்.
மேலும் 4 பேர் வரை படுகாயமடைந்து இருப்பதாக ஐரிஷ் காவல்துறை தகவல் தெரிவித்துள்ளது.

ஞாயிற்றுக்கிழமை அதிகாலை இந்த கோர விபத்தானது ஏற்பட்டுள்ளது. 5 இளைஞர்களுடன் வந்த BMW காரும், 3 பெண்கள் மற்றும் 7 வயது சிறுவன் வந்த Hyundai காரும் 74 மைல்களுக்கும் அதிகமான வேகத்தில் ஒன்றுடன் ஒன்று நேருக்கு நேர் மோதிக் கொண்டதில் இந்த கோர விபத்தானது ஏற்பட்டுள்ளது.
சம்பவ இடத்திலேயே 5 இளைஞர்களும் உயிரிழந்து விட்டதாக காவல்துறையினர் உறுதிப்படுத்தியுள்ளனர்.
Hyundai காரில் பயணித்த அனைவரும் தற்போது தீவிரமான காயத்துடன் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
விபத்தில் பலியானவர்களின் விவரங்களை பொலிஸார் வெளியிட்டுள்ளனர். அதன்படி, ஜெரமி ஓ பிரையன்(18), அலெக்ஸ் மெக்கார்த்தி(17), ஜோய் கார்தி(15), ஜாக் கென்னடி(17), கமில் புஸ்ட்கோவ்ஸ்கி(17) ஆகியோர் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.

இந்த துயர சம்பவத்தை தொடர்ந்து உயிரிழந்தவர்களின் உறவினர்கள் மற்றும் நண்பர்கள் ஆழ்ந்த இரங்கலை தெரிவித்து வருகின்றனர்.
அதே சமயம் குறிப்பிட்ட வாகனம் எப்படி எதிர் திசையில் நுழைந்தது என்பது குறித்தும் தீவிர விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |