உலக அளவில் மாமன்னன் படைத்த சாதனை
இயக்குநர் மாரி செல்வராஜ் இயக்கத்தில் வெளியான படமான மாமன்னன் படமானது தற்போது ஒடிடியில் வெளியாகி இந்திய அளவில் முதலாம் இடத்தை பெற்றுள்ளது.
‘மாமன்னன்’
மாரிசெல்வராஜ் இயக்கத்தில் உதயநிதி ஸ்டாலின், வடிவேலு, ஃபஹத் ஃபாசில் உள்ளிட்ட பலர் நடிப்பில் கடந்த ஜூன் மாதம் திரையரங்குகளில் வெளியானது மாமன்னன். இதில் கீர்த்தி சுரேஷ் கதாநாயகியாக நடித்துள்ளார்.
ரூ.35 கோடி பட்ஜெட்டில் உருவான இப்படம் பாக்ஸ் ஆஃபீஸில் ரூ.50 கோடி வசூலை பெற்றது.
இந்நிலையில் கடந்த ஜூலை மாதம் 27 ம் திகதி Netflix ஓடிடி தளத்தில் வெளியானது. இதன் பிறகு இப்படத்தின் வளர்ச்சியானது மேலோங்கியது.
ஓடிடி
வெளியான ஒரு சில நாட்களிலேயே இந்திய அளவில் முதலாம் இடத்தை பிடித்துள்ளது. இந்திய திரைப்படத்தின் மொத்த ரசிகர்களும் இப்படித்திற்கு பெரும் வரவேற்பை அளித்துள்ளார்கள்.
Netflix இல் மட்டுமில்லாமல் உலகளவில் டாப் பத்து படங்களில் ஒன்பதாவது இடத்தைப் பிடித்துள்ளது.
அதில் மூன்று நாடுகளில் முதலாவது இடத்தையும் அதனுடன் சேர்ந்து ஆறு நாடுகளில் முதல் பத்து இடங்களிலும் இப்படம் இடம் பெற்றுள்ளது.
மேலும் கடந்த வாரத்தில் மட்டும் 1.2 மில்லியன் மக்கள் இத்திரைப்படத்தைப் பார்வையிட்டுள்ளனர்.
இதையடுத்து Netflix இன் டாப் 10 ட்ரெண்டிங்கிள் உள்ள ஒரே இந்தியப்படமும் தமிழ் படமும் ‘மாமன்னன்’ படம் என்பது குறிப்பிடத்தக்கது.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |