மாஸ் காட்டிய மாஸ் சதாகத்: வெளியேறியது ஸ்டீவ் ஸ்மித்தின் முல்தான் சுல்தான்ஸ்
PSL எலிமினேட்டர் 1 போட்டியில் ஐதராபாத் கிங்ஸ்மென் அணி 8 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் முல்தான் சுல்தான்ஸை வீழ்த்தியது.
ஷான் மசூட் 69 ஓட்டங்கள்
லாகூரில் ஐதராபாத் கிங்ஸ்மென் மற்றும் முல்தான் சுல்தான்ஸ் அணிகளுக்கு இடையிலான எலிமினேட்டர் 1 போட்டி நடந்தது.

முதலில் ஆடிய முல்தான் சுல்தான்ஸ் அணியில் ஷான் மசூட் 46 பந்துகளில் 69 ஓட்டங்கள் (4 சிக்ஸர்கள், 4 பவுண்டரிகள்) விளாசினார்.
இதன்மூலம் முல்தான் சுல்தான்ஸ் அணி 20 ஓவர்களில் 159 ஓட்டங்கள் எடுத்தது. மொஹம்மது அலி, ஆகிஃப் ஜாவேத், ஹுனைன் ஷா தலா 2 விக்கெட்டுகள் வீழ்த்தினர்.
மாஸ் சதாகத் அபாரம்
பின்னர் களமிறங்கிய ஐதராபாத் கிங்ஸ்மென் அணி 15.2 ஓவர்களில் 2 விக்கெட்டுகள் இழப்பிற்கு 162 ஓட்டங்கள் எடுத்து அபார வெற்றி பெற்றது.

உஸ்மான் கான் 35 பந்துகளில் 3 சிக்ஸர்கள், 8 பவுண்டரிகளுடன் 64 ஓட்டங்கள் குவித்தார். தொடக்க வீரர் மாஸ் சதாகத் கடைசிவரை ஆட்டமிழக்காமல் 33 பந்துகளில் 64 ஓட்டங்கள் விளாசினார். அவரது ஸ்கோரில் 4 சிக்ஸர்கள், 4 பவுண்டரிகள் அடங்கும்.

தோல்வியடைந்த முல்தான் சுல்தான்ஸ் அணி தொடரை விட்டு வெளியேறியது. வெற்றி பெற்ற ஐதராபாத் கிங்ஸ்மென் அணி நாளை எலிமினேட்டர் 2 போட்டியில் இஸ்லாமாபாத் யுனைடெட் அணியை எதிர்கொள்கிறது.
இதில் வெற்றி பெறும் அணி மே 3ஆம் திகதி நடைபெறும் இறுதிப் போட்டியில் பெஷாவர் ஜல்மி அணியை எதிர்கொள்ளும்.

| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |