கனடாவை அச்சுறுத்தும் ட்ரம்ப்... பிரான்ஸ் ஜனாதிபதி மேக்ரான் விமர்சனம்
கனடாவை அமெரிக்காவின் 51ஆவது மாகாணமாக இணைக்கப்போவதாக அமெரிக்க ஜனாதிபதி ட்ரம்ப் அச்சுறுத்துவது குறித்து பிரான்ஸ் ஜனாதிபதியான இமானுவல் மேக்ரான் கருத்தொன்றை தெரிவித்துள்ளார்.
கனடாவை அச்சுறுத்தும் ட்ரம்ப்...
ஆட்சிக்கு வந்ததிலிருந்தே சர்வாதிகாரி போல் நடந்துகொள்ளும் அமெரிக்க ஜனாதிபதி ட்ரம்ப், கனடாவை அமெரிக்காவின் 51ஆவது மாகாணமாக இணைக்கப்போவதாக மிரட்டிக்கொண்டே இருக்கிறார்.

இந்நிலையில், ட்ரம்பின் மிரட்டல் குறித்து கருத்து தெரிவித்துள்ள பிரான்ஸ் ஜனாதிபதியான இமானுவல் மேக்ரான், ட்ரம்பின் அச்சுறுத்தல், ’வலிமையானவர்களின் சட்டத்துக்காக’ கூட்டாளர்களை பலிகொடுக்கும் அமெரிக்காவின் வெளிநாட்டுக் கொள்கைக்கு உதாரணமாக அமைந்துள்ளது என்று கூறியுள்ளார்.
’வலிமையானவர்களின் சட்டம்’ என்பது, காட்டின் சட்டமாகும். இயற்கையில் உள்ளதைப் போல, வலிமையானவன் பிழைப்பான், பலவீனமானவன் அழிவான் என்கிறது அந்த விதி. அதாவது, பலவீனமானவர்கள் ஒடுக்கப்பட்டு, வலிமையானவர்கள் உயிர் பிழைக்கும் இயற்கையின் விதியை, சமூக சட்டங்களுக்கு எதிராகப் பயன்படுத்துவதை இந்த விதி குறிக்கிறது.
ட்ரம்ப் விடயத்தில் அதைத்தான் மேக்ரானும் மேற்கோள் காட்டியுள்ளார். ட்ரம்பின் அச்சுறுத்தல்கள் குறித்து பிரான்ஸ் தூதர்களிடையே உரையாற்றிய மேக்ரான், அது மிகப்பெரிய மிகப்பெரிய ஒழுங்கின்மை, வலிமையானவர்களின் சட்டம், மேலும் கிரீன்லாந்து ஆகிரமிக்கப்படுமா, கனடா அமெரிக்காவின் 51வது மாநிலமாக மாறுமா என மக்கள் தினமும் மக்கள் பார்த்துக்கொண்டே இருக்கும் நிலை உருவாகியுள்ளது என்று கூறியுள்ளார் அவர்.

அத்துடன், அமெரிக்கா தன் நட்பு நாடுகள் சிலவற்றிடமிருந்து படிப்படியாக விலகி, சர்வதேச விதிகளிலிருந்து தன்னை விடுவித்துக் கொள்கிறது என்றும் மேக்ரான் கூறியுள்ளார்.
இதற்கிடையில், ட்ரம்ப் கனடாவை அமெரிக்காவின் 51ஆவது மாகாணமாக இணைக்கப்போவதாக அச்சுறுத்திவருவது குறித்து பிரான்ஸ் ஜனாதிபதியான இமானுவல் மேக்ரான் பேசியுள்ளது இதுவே முதல் முறை என்பது குறிப்பிடத்தக்கது.
| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |