48 மணி நேரத்துக்குள்... பிரான்ஸ் பிரதமர் தேர்வு தொடர்பில் வெளியாகியுள்ள தகவல்
பிரான்ஸ் பிரதமர் தேர்வு தொடர்பில் இமானுவல் மேக்ரான் தெரிவித்ததாக ஒரு தகவல் வெளியாகியுள்ளது.
48 மணி நேரத்துக்குள்...
48 மணி நேரத்துக்குள் பிரான்சுக்கான புதிய பிரதமரின் பெயரை அறிவிக்க இருப்பதாக பிரான்ஸ் ஜனாதிபதியான இமானுவல் மேக்ரான் கூறியுள்ளதாக அவருக்கு நெருக்கமான வட்டாரத்தைச் சேர்ந்தவர்கள் தெரிவித்துள்ளார்கள்.
நேற்று, பிரதமர் தேர்வு தொடர்பில் பிரான்ஸ் அரசியல் கட்சித் தலைவர்களை ஜனாதிபதி மாளிகையில் சந்தித்த மேக்ரான், அடுத்த 48 மணி நேரத்துக்குள் பிரான்சுக்கான புதிய பிரதமரின் பெயரை அறிவிக்க இருப்பதாக தெரிவித்துள்ளதாக பிரான்ஸ் ஊடகம் ஒன்று தெரிவித்துள்ளது.
பிரான்ஸ் பிரதமர் மிஷெல் பார்னியேர் பிரான்ஸ் அரசியலமைப்பின் 49.3 வது பிரிவின் கீழ் சிறப்பு அதிகாரங்களைப் பயன்படுத்தி வரி விதிப்புகளும், சலுகைக் குறைப்புகளும் கொண்ட தனது பட்ஜெட்டை தாக்கல் செய்தார்.
ஆனால், இடதுசாரிக் கட்சியான France Unbowed (LFI) மற்றும் Marine Le Penஇன் வலதுசாரிக் கட்சியான National Rally (RN) ஆகிய கட்சிகள், பிரதமருக்கெதிராக நம்பிக்கையில்லாத் தீர்மானம் கொண்டுவந்தன.
நம்பிக்கையில்லாத் தீர்மானத்தில் பார்னியேர் தோல்விடைந்ததால் பிரான்ஸ் அரசு கவிழ்ந்தது குறிப்பிடத்தக்கது.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |