பிரான்சுக்குள்ளும் மூக்கை நுழைக்கும் ட்ரம்ப்: மேக்ரான் பதிலடி
Macron and Carney meet in French territory: பிரான்ஸ் ஜனாதிபதி இமானுவல் மேக்ரானும், கனடா பிரதமரான மார்க் மார்னியும், பிரான்ஸ் கடல் கடந்த பிரதேசம் ஒன்றில் சந்தித்துள்ளார்கள்.
அமெரிக்க ஜனாதிபதி ட்ரம்ப், தனது நாடு பிடிக்கும் ஆசையை மெல்ல வெளியிட்டுவருகிறார்.
அராஜகமாக, மற்ற நாடுகளை அமெரிக்காவுக்கு சொந்தமானவை என காண்பிக்கும் வகையில் தினமும் தனது சமூக ஊடகப்பக்கத்தில் செய்திகளும் படங்களும் வெளியிட்டு மற்ற நாடுகளை எரிச்சலூட்டுவதை வழக்கமாக்கிக்கொண்டுள்ளார் ட்ரம்ப்.
அவ்வகையில், மெல்ல பிரான்சுக்குள்ளும் மூக்கை நுழைத்துள்ளார் ட்ரம்ப்!
பிரான்சுக்குள் மூக்கை நுழைக்கும் ட்ரம்ப்
சமீபத்தில் தனது சமூக ஊடகப்பக்கத்தில் உலக வரைபடம் ஒன்றை வெளியிட்டிருந்தார் ட்ரம்ப்.

கனடா, கிரீன்லாந்து, ஐஸ்லாந்து, மெக்சிகோ, மத்திய அமெரிக்கா மற்றும் கரீபியன் பகுதியிலுள்ள பிரான்சுக்கு சொந்தமான Saint-Pierre மற்றும் Miquelon, மற்றும் சில கடல் கடந்த பிரதேசங்களும் அமெரிக்காவின் பகுதிகளே என காட்டும் வகையில் அந்த வரைபடம் அமைக்கப்பட்டிருந்தது.
கனடா, ஐஸ்லாந்து மற்றும் பிற அமெரிக்க நாடுகளுக்கு எரிச்சலூட்டியது போதாதென்று, பிரான்சையும் எரிச்சலூட்ட முயன்றுள்ளார் ட்ரம்ப்.
மேக்ரான் பதிலடி
இப்படி பிரான்சின் கடல் கடந்த பிரதேசங்களையும் அமெரிக்காவுடன் இணைத்து ட்ரம்ப் வரைபடம் வெளியிட்டுள்ளது குறித்து மேக்ரானிடம் ஊடகவியலாளர்கள் கேள்வி எழுப்பினார்கள்.

அதற்கு பதிலளித்த மேக்ரான், சிலருக்கு விசித்திரமான எண்ணங்கள் ஏற்படுவதாலோ, அவர்கள் விசித்திரமான விடயங்களை பேசுகிறார்கள் என்பதற்காகவோ, பிரான்சுக்கு சொந்தமான இடங்கள் பிரான்சுக்கு சொந்தமானவை என திரும்பத் திரும்ப வலியுறுத்தவேண்டிய அவசியம் தனக்கு இல்லை என குறிப்பிட்டுள்ளார்.
அதுமட்டுமின்று, ட்ரம்பை அலட்சியப்படுத்துவதுபோல் ஒரு விடயத்தையும் செய்துள்ளார் மேக்ரான்.
ஆம், பிரான்சின் கடல் கடந்த பிரதேசங்களான Saint-Pierre மற்றும் Miquelon தீவுகளில், மேக்ரானும் கனடா பிரதமரான மார்க் கார்னியும் சந்தித்துப் பேசியுள்ளார்கள்.

அந்த பேச்சுவார்த்தையின் மூலம், இது எங்கள் நாடு என சொல்லாமல் சொல்லிவிட்டார் மேக்ரான்.
இன்னொரு சுவாரஸ்யமான விடயம் என்னவென்றால், இந்த Saint-Pierre மற்றும் Miquelon தீவுகள், கனடாவின் Newfoundlandஇலிருந்து 15 மைல் தொலைவில் அமைந்துள்ளன.