ஐரோப்பா மற்றும் சீனா இடையேயான வர்த்தக உறவு..ஜேர்மன் சேன்ஸலர், மேக்ரான் அழைப்பு
ஐரோப்பிய ஒன்றிய மற்றும் சீனா வர்த்தக உறவுகளை 'மறு சமநிலைப்படுத்த', பிரான்ஸ் ஜனாதிபதி இமானுவெல் மேக்ரான் மற்றும் ஜேர்மன் சேன்ஸலர் ஓலாஃப் ஷோல்ஸ் அழைப்பு விடுத்துள்ளனர்.
சீனாவுக்கு மூன்று நாள் பயணமாக ஜேர்மனியின் சேன்ஸலர் ஓலாஃப் ஷோல்ஸ் செல்ல உள்ளார். அதற்கு முன்பாக, பிரான்ஸ் ஜனாதிபதி இமானுவல் மேக்ரானுடன் வீடியோ அழைப்பில் பேசியுள்ளார்.
உக்ரைனில் நடந்த போரின் தாக்கம், ஐரோப்பிய பாதுகாப்பில் உள்ள தாக்கம் குறித்து ஓலாஃப் ஷோல்ஸ் மற்றும் இமானுவல் மேக்ரான் வீடியோ அழைப்பில் விவாதித்ததாக பிரான்ஸ் ஜனாதிபதியின் அலுவலக அதிகாரிகள் தெரிவித்தனர்.
இந்த அழைப்பில் ஐரோப்பிய போட்டித்தன்மையை ஊக்குவிப்பதற்கான அவசியத்தை இருவரும் அடிக்கோடிட்டுக் காட்டியுள்ளனர். அத்துடன் உக்ரைனுக்கான அசைக்க முடியாத மற்றும் நீண்டகால ஆதரவை மீண்டும் உறுதிப்படுத்திய இருவரும், உக்ரைனுக்கு இராணுவ ஆதரவை வழங்குவதற்கான ஐரோப்பிய முயற்சிகள் பற்றி விவாதித்தனர்.
இதற்கிடையில், பெர்லினுக்கு அருகில் உள்ள Mesebergயில் மே 28ஆம் திகதி நடைபெறும் கூட்டு பிரெஞ்சு-ஜேர்மன் அமைச்சரவைக் கூட்டத்தில் மேக்ரானும், ஷோல்ஸும் நேருக்கு நேர் சந்திக்க உள்ளனர் என தெரிய வந்துள்ளது.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |