பிரித்தானியா வந்துள்ள பிரான்ஸ் ஜனாதிபதி மேக்ரான்: போர்கள் தொடர்பில் ஆலோசனை
பிரான்ஸ் ஜனாதிபதியான மேக்ரான் நேற்று பிரித்தானியா வந்துள்ள நிலையில், அவர் பிரித்தானிய பிரதமரை சந்தித்தார்.
பிரித்தானியா வந்துள்ள மேக்ரான்
பிரான்ஸ் ஜனாதிபதி இமானுவல் மேக்ரானும், பிரித்தானிய பிரதமர் கெய்ர் ஸ்டார்மரும் நேற்று பிரித்தானியாவில் சந்தித்துப் பேசினார்கள்.
மத்திய கிழக்கு மற்றும் உக்ரைன் போர் தொடர்பில் அவர்கள் இருவரும் ஆலோசனை மேற்கொண்டுள்ளார்கள்.
தேவை இருக்கும் வரையில் உக்ரைனுக்கு உதவ இரு தலைவர்களும் உறுதிபூண்டுள்ளார்கள்.
இதற்கிடையில், ஐரோப்பிய நாடுகள் அனைத்துமே, ட்ரம்ப் அமெரிக்க ஜனாதிபதியாக பதவியேற்கும் நாளை எதிர்கொள்ளத் தயாராகிவருகின்றன.
தான் அமெரிக்க ஜனாதிபதியாக பதவியேற்றதும், உக்ரைன் போரை முடிவுக்குக் கொண்டு வருவதாக ட்ரம்ப் கூறியுள்ளதால் அவர் என்ன செய்யப்போகிறார் என்பதை அறிவதற்காக, அவர் பதவியேற்கும் நாளுக்காக உலகம் ஆவலுடன் காத்திருக்கிறது!
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |