நைஜரில் இருந்து 1500 பிரெஞ்சு துருப்புகள் வெளியேற்றப்படுவர் - பிரான்ஸ் ஜனாதிபதி மேக்ரான் அறிவிப்பு
ஆப்பிரிக்க நாடான நைஜரில் இருந்து 1,500 துருப்புகள் வெளியேற்றப்படுவர் என பிரான்ஸ் ஜனாதிபதி இமானுவல் மேக்ரான் அறிவித்துள்ளார்.
ஆட்சி கவிழ்ப்பு
முன்னாள் காலனித்துவ சக்தியான பிரான்ஸ் மேற்கு ஆப்பிரிக்காவில் மூன்று நாடுகளில் 4,000 துருப்புகளை நிலை நிறுத்தியுள்ளது.
நைஜர் நாட்டிலும் பிரான்சின் துருப்புகள் உள்ளனர். அந்நாட்டின் ஜனாதிபதி முகமது பசௌம் ஆட்சி அகற்றப்பட்டது இராணுவம் அதிகாரத்தை கைப்பற்றியது.
AP/Jerome Delay
எனினும், பிரான்ஸ் தனது 1,500 வீரர்களை நிலை நிறுத்தி இருந்தது. ஆனால் மாலியில் ஆர்ப்பாட்டங்களில் பிரெஞ்சு எதிர்ப்பு அறிகுறிகள் தொடர்ந்து அசைக்கப்பட்டன.
மேக்ரான் அறிவிப்பு
இந்த நிலையில் பிரான்ஸ் ஜனாதிபதி மேக்ரான் நைஜரில் இருந்து தங்கள் நாட்டின் தூதர், பல இராஜதந்திரிகள் மற்றும் 1,500 துருப்புகள் வெளியேறுவார்கள் என அறிவித்துள்ளார்.
ஆட்சிக் கவிழ்ப்புக்குப் பிந்தைய அதிகாரிகள் இனி பயங்கரவாதத்திற்கு எதிராகப் போராட விரும்பவில்லை எனக் கூறிய மேக்ரான், வரும் வாரங்கள் மற்றும் மாதங்களில் துருப்புகள் திரும்பப் பெறப்படும் என தெரிவித்தார்.
Daniel Leal/AFP/Getty Images
பாரிஸின் பயங்கரவாத எதிர்ப்பு நடவடிக்கைகளின் மையப் பகுதியான நைஜரில் இருந்து வெளியேறுவது, சஹேல் பிராந்தியத்தில் கிளர்ச்சி எதிர்ப்பு நடவடிக்கைகள் வலுவிழக்கக்கூடிய கடுமையான அடியாகும் என்று கூறப்படுகிறது.
முன்னதாக, பிரெஞ்சு விமானங்கள் நைஜரின் வான்வெளியில் பறக்க இராணுவ ஆட்சியாளர்கள் தடை விதித்துள்ளதாக ஆப்பிரிக்கா மற்றும் மடகாஸ்கரில் உள்ள விமான ஊடுருவல் பாதுகாப்பு ஏஜென்சி கடந்த சனிக்கிழமை கூறியது குறிப்பிடத்தக்கது.
AFP/Getty Images
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |