புதிய கூட்டணி அமைக்க மேக்ரான் அழைப்பு: வெற்றி பெற்ற இடதுசாரியினர் கோபம்
பிரான்ஸ் ஜனாதிபதி மேக்ரான், புதிய, பெரிய கூட்டணி ஒன்றை அமைக்க அழைப்பு விடுத்துள்ள விடயம், அதிக வாக்குகள் பெற்ற இடதுசாரிக் கட்சியினருக்கு கோபத்தை ஏற்படுத்தியுள்ளது.
புதிய கூட்டணி அமைக்க மேக்ரான் அழைப்பு
பிரான்ஸ் ஜனாதிபதி இமானுவல் மேக்ரான் பிரெஞ்சு மக்களுக்கு எழுதி வெளியிட்டுள்ள கடிதம் ஒன்றில், தங்களை குடியரசுவாதக் கட்சிகள் என கருதும் கட்சிகள் அனைத்தும் இணைந்து, புதிய, பெரிய கூட்டணி ஒன்றை அமைக்க முன்வரவேண்டும் என கேட்டுக்கொண்டுள்ளார்.
வெற்றி பெற்ற இடதுசாரியினர் கோபம்
பிரான்ஸ் ஜனாதிபதி இமானுவல் மேக்ரான் பிரெஞ்சு மக்களுக்கு எழுதி வெளியிட்டுள்ள கடிதம் ஒன்றில், தங்களை குடியரசுவாதக் கட்சிகள் என கருதும் கட்சிகள் அனைத்தும் இணைந்து, தீவிரக் கொள்கைகள் கொண்ட கட்சிகளை ஓரங்கட்டும் வகையில், புதிய கூட்டணி ஒன்றை அமைக்க முன்வரவேண்டும் என கேட்டுக்கொண்டுள்ளார்.
அப்படியானால், தீவிரக் கொள்கை கொண்ட வலதுசாரிக் கட்சியை மட்டுமல்ல, தற்போதைய தேர்தலில் அதிக வாக்குகள் பெற்று முதலிடம் வகிக்கும் இடதுசாரிக் கட்சிகளையும் ஒதுக்கவேண்டும் என்பது அதன் பொருள் என்பதுபோலாகிவிடுகிறது.
ஆகவே, இடதுசாரிக் கட்சியினருக்கு மேக்ரானுடைய கடிதம் கோபத்தை ஏற்படுத்தியுள்ளது. மேக்ரான் ஜனநாயகத்திற்கு மதிப்பளிக்கவேண்டும் என்று அவர்கள் கூறியுள்ளார்கள். பிரெஞ்சு மக்கள் முடிவு செய்துள்ளார்கள், அவர்கள் முடிவுக்கு நாம் மரியாதை கொடுக்கவேண்டும் என Socialist கட்சியின் தலைவரான Olivier Faure கூறியுள்ளார்.
அத்துடன், அதிக இருக்கைகள் பெற்ற கட்சியை ஆட்சி அமைக்க மேக்ரான் அனுமதிப்பதே இப்போதைய சூழலில் அவர் நாட்டுக்குச் செய்யும் சிறந்த விடயமாக இருக்கும் என்கிறார் Eric Coquerel என்னும் இடதுசாரி நாடாளுமன்ற உறுப்பினர்.
விடயம் என்னவென்றால், சமீபத்தில் பிரான்சில் நடந்துமுடிந்த இரண்டாவது சுற்று தேர்தலில், எந்தக் கட்சிக்கும் தனி பெரும்பான்மை கிடைக்கவில்லை. ஆகவே, கூட்டணி அமைத்துத்தான் கட்சிகள் ஆட்சி அமைக்கும் நிலை ஏற்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |