ட்ரம்பின் தடாலடி வரி விதிப்பு... ஐரோப்பிய நிறுவனங்களுக்கு பிரான்ஸ் ஜனாதிபதியின் கோரிக்கை
அமெரிக்காவில் ஐரோப்பிய நிறுவனங்கள் திட்டமிட்டுள்ள முதலீட்டை நிறுத்தி வைக்க வேண்டும் என்று பிரெஞ்சு ஜனாதிபதி இமானுவல் மேக்ரான் கோரிக்கை வைத்துள்ளார்.
நிறுத்தி வைக்கப்பட வேண்டும்
அமெரிக்க இறக்குமதிகள் மீது உலகளாவிய வரிகளை உயர்த்துவதாக அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் அறிவித்த நிலையிலேயே ஜனாதிபதி மேக்ரான், ஐரோப்பிய நிறுவனங்களுக்கு அழைப்பு விடுத்துள்ளார்.
அமெரிக்காவுடன் வர்த்தக விடயங்கள் தெளிவுபடுத்தப்படும் வரை வரவிருக்கும் முதலீடுகள் அல்லது சமீபத்திய வாரங்களில் அறிவிக்கப்பட்ட முதலீடுகள் அனைத்தும் நிறுத்தி வைக்கப்பட வேண்டும் என மேக்ரான் தெரிவித்துள்ளார்.
பிரெஞ்சு கப்பல் நிறுவனமான CMA CGM, கப்பல் தளவாடங்கள் மற்றும் முனையங்களை உருவாக்க அமெரிக்காவில் 20 பில்லியன் டொலர்களை முதலீடு செய்ய திட்டமிட்டுள்ளதாக சில வாரங்களுக்கு முன்னர் அறிவித்துள்ளது.
பதிலளிக்க வேண்டும்
CMA CGM நிறுவனத்தின் இந்த முடிவை அப்போது ஜனாதிபதி ட்ரம்ப் வெகுவாக பாராட்டியிருந்தார். மட்டுமின்றி, பிரான்சின் Schneider Electric நிறுவனம் கடந்த மாத இறுதியில், AI வளர்ச்சியை ஊக்குவிப்பதற்காக அமெரிக்க எரிசக்தி உள்கட்டமைப்பை ஆதரிப்பதற்காக நாட்டில் 700 மில்லியன் டொலர்களை முதலீடு செய்வதாகக் கூறியது.
இந்த நிலையில், அமெரிக்க எஃகு மற்றும் அலுமினிய வரிகளுக்கு முன்னர் விதித்த பதிலடியை விட, பரஸ்பர வரிகளுக்கு பதில் மிகவும் சக்திவாய்ந்ததாக இருக்கும் என்றும் ஜனாதிபதி மேக்ரான் தெரிவித்துள்ளார்.
மேலும், இந்த வரிவிதிப்புகள் கடுமையானவை, ஆதாரமற்றவை மற்றும் சர்வதேச வர்த்தகத்திற்கு ஏற்பட்ட நெருக்கடி என்றும் மேக்ரான் தெரிவித்துள்ளார். மட்டுமின்றி ஐரோப்பா தொழில்துறை வாரியாக பதிலளிக்க வேண்டும் என்றும் அவர் கோரிக்கை வைத்துள்ளார்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |