ராணுவத்தில் இளைஞர்களை சேர்க்கும் மேக்ரானின் திட்டம்: சர்ச்சையும் விளக்கமும்
ராணுவத்தில் இளைஞர்களை சேர்ப்பது குறித்த பிரான்ஸ் ஜனாதிபதியின் கருத்தைத் தொடர்ந்து சர்ச்சை ஒன்று உருவாகியுள்ளது.
ராணுவத்தில் இளைஞர்களை சேர்க்கும் மேக்ரானின் திட்டம்
ரஷ்யா உக்ரைனை ஊடுருவியதிலிருந்தே பல ஐரோப்பிய நாடுகள் தங்கள் ராணுவத்தை வலுப்படுத்தும் முயற்சிகளில் ஈடுபட்டுவருகின்றன.

பிரான்சும் அதேபோல ராணுவத்தை பலப்படுத்தவேண்டும் என பிரான்ஸ் ஜனாதிபதியான இமானுவல் மேக்ரான் விரும்புகிறார்.
சமீபத்தில் அவர் ராணுவத்தில் இளைஞர்கள் தானே முன்வந்து சேரும் திட்டம் குறித்து பேசியிருந்தார்.
அதைத் தொடர்ந்து, ராணுவ ஜெனரலான ஃபேபியன் (Fabien Mandon) என்பவர், நம் நாடு ரஷ்ய போரில் ஈடுபடுவதற்காக நமது இளைஞர்களை உக்ரைனுக்கு அனுப்பினால் நாம் நம் பிள்ளைகளை இழக்க நேரிடும் என்று கூற, பதற்றமான ஒரு சூழல் உருவானது.

இந்நிலையில், தனது உரைக்கு விளக்கம் அளித்துள்ளார் மேக்ரான். அதாவது, இளைஞர்கள் ராணுவத்தில் சேருவது குறித்து தான் பேசிய விடயம் ரஷ்யப் போர் தொடர்பிலானதல்ல என்று கூறியுள்ளார் அவர்.
இந்த புதிய ராணுவ திட்டம், நம் இளைஞர்களை உக்ரைனுக்கு அனுப்புவது தொடர்பிலானது அல்ல, மக்கள் அது குறித்து குழப்பம் அடையவேண்டாம் என்று கூறியுள்ளார் மேக்ரான்.
| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் |