பிரான்சின் அடுத்த பிரதமர் யார்? வெளியான முக்கிய போட்டியாளர்களின் பெயர்கள்
பிரான்சின் புதிய பிரதமரை இன்னும் சில தினங்களில் அந்நாட்டு ஜனாதிபதி இம்மானுவேல் மக்ரோன் தேர்ந்தெடுப்பார் என தகவல் வெளியாகியுள்ளது.
பிரான்ஸ் பிரதமர் ராஜினாமா
பிரான்ஸ் நாடாளுமன்றத்தில் நடைபெற்ற நம்பிக்கையில்லா தீர்மானம் மீதான வாக்கெடுப்பில் தோல்வியடைந்த பிறகு பிரதமர் பிராங்கோயிஸ் பைரூ செவ்வாய்க்கிழமை தனது பதவியை ராஜினாமா செய்தார்.
இந்நிலையில் பிரான்ஸ் ஜனாதிபதி இம்மானுவேல் மக்ரோன் இன்னும் சில தினங்களில் நாட்டின் புதிய ஜனாதிபதியை தேர்ந்தெடுப்பார் என தகவல் வெளியாகியுள்ளது.
பிரான்ஸின் அடுத்த பிரதமர் யார்?
பிரான்ஸின் அடுத்த பிரதமருக்கான வரிசையில் பல பெயர்கள் வெளிவர தொடங்கியுள்ளன.
பிரான்சின் அடுத்த பிரதமராக ஜனாதிபதி மக்ரோனுக்கு நெருக்கமான, நம்பகமான மற்றும் நீண்ட கால அமைச்சரவை அனுபவம் உள்ள உறுப்பினர் தேர்ந்தெடுக்கப்படலாம் என கூறப்படுகிறது.
அந்த வரிசையில், அடுத்த பிரதமருக்கான முக்கிய போட்டியாளராக நீதித்துறை அமைச்சர் ஜெரால்ட் டார்மனின் மற்றும் பாதுகாப்பு அமைச்சர் செபாஸ்டின் லெகோர்னு ஆகியோர் இருப்பதாக கூறப்படுகிறது.
மேலும் பரிசீலனையில் சுகாதார அமைச்சர் கேத்தரின் வாட்ரின் மற்றும் நிதி அமைச்சர் எரிக் லோம்பார்ட் ஆகியோர் உள்ளனர்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் |