ட்ரம்பால் உலகத் தலைவர்களிடையே உருவாகிவரும் கருத்து வேறுபாடுகள்
உக்ரைன் ரஷ்யப் போரில் ட்ரம்பின் தலையீட்டைத் தொடர்ந்து உலகத் தலைவர்களிடையே கருத்து வேறுபாடுகள் உருவாகிவருவதைக் காணமுடிகிறது.
பிரான்ஸ் ஜனாதிபதி பதிலடி
உக்ரைன் போர் உருவாகும் முன் நெருங்கிய நண்பர்கள் போல காணப்பட்ட பிரான்ஸ் ஜனாதிபதி இமானுவல் மேக்ரானும் ரஷ்ய ஜனாதிபதி புடினும் இப்போது கிட்டத்தட்ட எதிரணியினர் போல ஆகிவிட்டார்கள்.
இதற்கிடையில், உக்ரைன் ரஷ்யப் போரில் ட்ரம்பின் தலையீட்டைத் தொடர்ந்து உலகத் தலைவர்களிடையே கருத்து வேறுபாடுகள் உருவாகிவருவதைக் காணமுடிகிறது.
உக்ரைன் அமைதி தொடர்பில் ஒரு அணியாக ரஷ்யாவும் அமெரிக்காவும் நிற்க, மறுபக்கம் பிரித்தானியா, பிரான்ஸ் முதலான ஐரோப்பிய நாடுகள் ஒரு அணியில் நிற்கின்றன.
எல்லோரும் இணைந்தே அமைதியை ஏற்படுத்த முயல்வது போல் ஒரு தோற்றம் காணப்பட்டாலும், அவ்வப்போது அவர்களுடைய உண்மையான உணர்வுகள் வார்த்தையாக வெடித்துவிடுகின்றன.
உக்ரைன் போரை நிறுத்த நடவடிக்கைகள் எடுப்பதாகக் கூறினாலும், ட்ரம்ப் தொடர்ந்து உக்ரைன் ஜனாதிபதியான வோலோடிமிர் ஜெலன்ஸ்கியை அவமதிக்கும் விதத்தில் பேசி வருகிறார்.
ஜெலன்ஸ்கி உக்ரைன் ஜனாதிபதியாகும் முன், ஒரு நகைச்சுவை நடிகராக இருந்தவர். அதை கேலியாக சுட்டிக்காட்டி அவரை காமெடியன் என்று கேலி பேசியுள்ளார் ட்ரம்ப்.
"#Zelenskyy better move fast or he is not going to have a country left... #Europe has failed to bring peace... Millions have unnecessarily died..."
— Aimal Faizi (@AimalFaizi) February 19, 2025
All true & very well said @realDonaldTrump https://t.co/415TPl73DG
அத்துடன், ஜெலன்ஸ்கியின் பதவிக்காலம் முடிந்துவிட்டதால், அவர் உக்ரைன் ஜனாதிபதியே இல்லை, ஆகவே, அவருடன் பேச்சுவார்த்தை நடத்துவது எப்படி என அமெரிக்க தரப்பு கேள்வி எழுப்பியதும் உண்டு.
இந்நிலையில், வார்த்தை மோதல் முற்றி, ஜெலன்ஸ்கியை சர்வாதிகாரி என விமர்சித்துள்ளார் ட்ரம்ப்.
ஆனால், ஜெலன்ஸ்கிக்கு ஆதரவாகவும், ட்ரம்புக்கு பதிலடி கொடுக்கும் வகையிலும், பிரான்ஸ் ஜனாதிபதியான இமானுவல் மேக்ரான், ஜெலன்ஸ்கி சுதந்திர அமைப்பின் மூலம் தேர்ந்தெடுக்கப்பட்டவர் என்று கூறியுள்ளார்.
💯 Macron: Zelenskyy was elected in free elections, unlike Putin https://t.co/kEP1AKfjJr
— Ukrainska Pravda in English (@pravda_eng) February 21, 2025
சமூக ஊடகம் ஒன்றில் கேள்வி பதில் நிகழ்ச்சி ஒன்றின்போது, ஜெலன்ஸ்கி சுதந்திர அமைப்பின் மூலம் ஜனாதிபதியாகத் தேர்ந்தெடுக்கப்பட்டவர், ஆனால், புடின் அப்படி அல்ல என்று கூறியுள்ளார் மேக்ரான்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |