ஈரான் பிடித்துவைத்துள்ள பிரான்ஸ் குடிமக்களை உடனே விடுவிக்கவேண்டும்: மேக்ரான் எச்சரிக்கை
ஈரான் பிடித்துவைத்துள்ள பிரான்ஸ் குடிமக்களை உடனே விடுவிக்கவேண்டும் என்று வலியுறுத்தியுள்ள பிரான்ஸ் ஜனாதிபதி இமானுவல் மேக்ரான், ஈரான் மீது தடைகள் விதிக்கப்படும் என எச்சரிக்கை விடுத்துள்ளார்.
பிரான்ஸ் குடிமக்களை உடனே விடுவிக்கவேண்டும்
நியூயார்க்கில் ஐ.நா பொதுச்சபை கூட்டத்துக்காக உலக நாடுகளின் தலைவர்கள் பலர் அமெரிக்கா சென்றுள்ள நிலையில், ஈரான் ஜனாதிபதியான Masoud Pezeshkianஐ சந்தித்துள்ளார் மேக்ரான்.
அவரிடம், ஈரான் பிணைக்கைதிகளாக பிடித்துவைத்துள்ள Cecile Kohler, Jacques Paris மற்றும் Lennart Monterlos என்னும் மூன்று பிரெஞ்சுக் குடிமக்களையும் உடனடியாக விடுவிக்கவேண்டும் என தான் வற்புறுத்தியதாக தெரிவித்துள்ளார் மேக்ரான்.
I met with Iranian President @drpezeshkian on the sidelines of the United Nations General Assembly.
— Emmanuel Macron (@EmmanuelMacron) September 24, 2025
First and foremost, I reiterated my demand: Cécile Kohler, Jacques Paris, and Lennart Monterlos — state hostages arbitrarily detained in Iran… pic.twitter.com/L0veei8jE4
ஈரான் அணு ஆயுதங்களை உருவாக்கக்கூடாது என்று கூறிய மேக்ரான், அணு ஆயுதங்கள் தொடர்பான கட்டுப்பாடுகளுக்கு இணங்க ஈரான் மறுத்தால் ஜேர்மனி மற்றும் பிரித்தானியாவுடன் இணைந்து ஈரான் மீது தடைகள் விதிக்கப்படும் என்றும் எச்சரித்துள்ளார் மேக்ரான்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் |