பிரான்ஸ் ஜனாதிபதியைக் கவர்ந்துள்ள இந்திய திரைப்படம்: வெளியிட்டுள்ள வீடியோ
பிரான்ஸ் ஜனாதிபதி இமானுவல் மேக்ரானை, இந்திய திரைப்படமான துரந்தர் வெகுவாக கவர்ந்துவிட்டதுபோலிருக்கிறது.
மேக்ரான் வெளியிட்டுள்ள வீடியோ
இன்று பிரான்சில் G7 உச்சி மாநாடு துவங்கும் நிலையில், அம்மாநாட்டில் கலந்துகொள்வதற்காக பிரான்ஸ் சென்றுள்ள இந்திய பிரதமர் மோடிக்கு உற்சாக வரவேற்பளித்தார் பிரான்ஸ் ஜனாதிபதியான இமானுவல் மேக்ரான்.

அதைத் தொடர்ந்து, தானும் பிரதமர் மோடியும் சந்தித்துக்கொள்ளும் நிகழ்வுகளைக் காட்டும் வீடியோ ஒன்றை சமூக ஊடகமான எக்ஸில் பகிர்ந்துள்ளார் மேக்ரான்.
🇮🇳🇫🇷 pic.twitter.com/MD1gMC04dp
— Emmanuel Macron (@EmmanuelMacron) June 14, 2026
அந்த வீடியோவின் பின்னணியில் இடம்பெற்றுள்ள பாடல், சமீபத்தில் வெளியாகி, பெரும் வரவேற்பையும் வசூலையும் குவித்த துரந்தர் திரைப்படத்தில் இடம்பெற்றுள்ள ஒரு பாடல்!
விடயம் என்னவென்றால், ஏற்கனவே பிப்ரவரி மாதம் இந்தியா சென்றிருந்த மேக்ரான், இந்தியா சென்றுவிட்டு நாடு திரும்பும்போது, இந்தியாவுக்கு நன்றி கூறும் வகையில் ஒரு வீடியோவை வெளியிட்டிருந்தார்.
Thank you India! 🇮🇳🇫🇷 pic.twitter.com/vDJ9IH2hZy
— Emmanuel Macron (@EmmanuelMacron) February 19, 2026
அந்த வீடியோவின் பின்னணியிலும் துரந்தர் திரைப்பட பாடல் ஒன்றுதான் ஒலித்தது என்பது குறிப்பிடத்தக்கது.
| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |