உக்ரைன் வெற்றியை தீவிரப்படுத்த முக்கிய தலைவருடன் விவாதித்த மேக்ரான்
பிரான்ஸ் ஜனாதிபதி இமானுவல் மேக்ரான், உக்ரைன் போரில் வெற்றி பெற முக்கிய தலைவரை சந்தித்து விவாதித்தார்.
ஓர் ஆண்டு நிறைவு
ரஷ்யா தொடுத்த போர் ஓர் ஆண்டை நிறைவு செய்த நிலையில் நாட்டு வீரர்கள் முன் தோன்றிய உக்ரைன் ஜனாதிபதி வோலோடிமிர் ஜெலென்ஸ்கி சூளுரைத்தார்.
இந்த ஆண்டிலும் யாராலும் நம்மை வெல்ல முடியாது என அவர் அழுத்தமாக கூறினார். உக்ரைனுக்கு பல நாடுகள் ஆதரவு கொடுத்து வருகின்றன.
உக்ரைன் மக்களின் ஒற்றுமைக்கும், வெற்றிக்கும் பிரான்ஸ் துணை நிற்கும் என அந்நாட்டு ஜனாதிபதி இமானுவல் மேக்ரான் கூறியிருந்தார்.
Ukrainian Presidential Press Office / AP
மேக்ரான் - எர்டோகன் விவாதம்
இந்த நிலையில், உக்ரைனுக்கு ஆதரவை அதிகரிக்க அவர் துருக்கி ஜனாதிபதி எர்டோகனுடன் விவாதித்துள்ளார். இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள பதிவில்,
'உக்ரைனில் உள்ள மோதல் குறித்து ஜனாதிபதி எர்டோகனும் நானும் விவாதித்தோம். உக்ரைன் வெற்றி பெறுவதற்கு நாம் ஆதரவை மேலும் தீவிரப்படுத்த வேண்டும். அதேபோல் ரஷ்யாவின் ஆக்கிரப்பை துறந்து அதைத் தள்ளவும், அந்நாட்டின் மீதான அழுத்தத்தை அதிகரிக்கவும் ஆலோசித்தோம்' என தெரிவித்துள்ளார்.