ஜனாதிபதி மேக்ரானின் முடிவு: பிரெஞ்சு ஜனநாயகத்திற்கு ஆபத்து
பிரான்ஸ் ஜனாதிபதி இமானுவல் மேக்ரான் நாடாளுமன்றத்தைக் கலைத்துவிட்டு தேர்தலை எதிகொள்ள எடுத்துள்ள முடிவானது பிரெஞ்சு ஜனநாயகத்திற்கு ஆபத்தை விளைவிக்கும் என்ற விமர்சனம் எழுந்துள்ளது.
இனி கலவரங்கள் மட்டுமே மிஞ்சும்
ஐரோப்பிய நாடாளுமன்றத்தில் தீவிர வலதுசாரிகளின் கை ஓங்கியுள்ள நிலையிலேயே பிரான்ஸ் ஜனாதிபதி இமானுவல் மேக்ரான் தேர்தலை எதிர்கொள்ள முடிவு செய்தார்.
ஆனால் தற்போதைய அரசியல் சூழலில், அந்த முடிவானது பிரெஞ்சு ஜனநாயகத்திற்கு ஆபத்தை விளைவிக்கும் என்பதுடன் பிரான்ஸ் தெருக்களில் இனி கலவரங்கள் மட்டுமே மிஞ்சும் என்று Nicolas Baverez என்ற அரசியல் நிபுணர் பதிவு செய்துள்ளார்.
தேர்தலின் முதல் சுற்றுக்கு ஒரே ஒரு வாரம் எஞ்சியுள்ள நிலையில், மேக்ரானின் கணிப்புகள் அனைத்தும் தவறியதாகவே கூறப்படுகிறது. தீவிர வலதுசாரிகளான National Rally முதலிடத்தில் தொடர்கிறது, தற்போது தீவிர இடதுசாரிகள் இரண்டாம் இடத்தில் முந்தியுள்ளனர்.
இதில், முழுமையான பெரும்பான்மையுடன் National Rally ஆட்சியமைக்கும் அல்லது தொங்கு நாடாளுமன்றத்திற்கான வாய்ப்பு அமையும் என்றே அரசியல் நோக்கர்கள் கூறுகின்றனர்.
மேக்ரான் அரசியல் ஆதாயம்
அத்துடன், பொருளாதார நெருக்கடி, தெருக்களில் வன்முறை மற்றும் ஜனநாயகத்தின் வீழ்ச்சி ஏற்படும் என Nicolas Baverez பட்டியலிட்டுள்ளார். நாட்டின் ஜனாதிபதியே, உரிய முடிவெடுக்க தவறிய நிலையில், மக்கள் என்ன செய்வார்கள் என்ற கேள்வியும் Nicolas Baverez எழுப்பியுள்ளார்.
நாடு ஒரு ஆபத்தான கட்டத்தை நோக்கி நகர்வதை ஒட்டுமொத்த பிரன்ஸ் மக்களும் உணர்ந்துள்ளனர் என்றும் Nicolas Baverez குறிப்பிட்டுள்ளார். மட்டுமின்றி, தீவிர வலதுசாரிகள் அல்லது தீவிர இடதுசாரிகளின் கைகளில் நாடு சிக்கினால் உளநாட்டுப் போர் உறுதி என்பதை ஜனாதிபதி மேக்ரான் ஏற்கனவே எச்சரித்துள்ளார்.
ஆனால், வாக்காளர்களை அச்சுறுத்தி மேக்ரான் அரசியல் ஆதாயம் தேடுகிறார் என்ற பரப்புரை முன்னெடுக்கப்பட்டுள்ளது. மேலும், ஜனநாயகத்தில் நீங்கள் அச்சத்தை விதைத்து ஆதாயம் தேட முயற்சிக்கும்போது, வெறுப்பு மற்றும் வன்முறையை வளர்க்கிறீர்கள் என்று பொருள் என Nicolas Baverez குறிப்பிட்டுள்ளார்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |