தன் மனைவியை ஆண் என்று கூறிய பெண் மீது வழக்குத் தொடர்ந்தது ஏன்? மேக்ரான் விளக்கம்
பிரான்ஸ் ஜனாதிபதி இமானுவல் மேக்ரான், தன் மனைவியை ஆண் என்று கூறிய பெண் மீது வழக்குத் தொடர்ந்தது எதனால் என்பதற்கு முதன்முறையாக விளக்கமளித்துள்ளார்.
மேக்ரான் மனைவியை ஆண் என விமர்சிக்கும் பெண்
கேண்டேஸ் ஓவன்ஸ் (Candace Owens) என்னும் அமெரிக்கப் பெண், ஒரு தொலைக்காட்சி பிரபலம் மற்றும் அரசியல் விமர்சகரும் ஆவார்.
இந்த கேண்டேஸ், மேக்ரானின் மனைவியான பிரிஜிட் மேக்ரானை கேலி பேசுவதையே வழக்கமாகக் கொண்டவர்.
குறிப்பாக, பிரிஜிட் பெண் அல்ல, அவர் ஆணாகப் பிறந்தவர் என கேண்டேஸ் கூறுவதுண்டு. அதற்காகவே அவர் ’Becoming Brigitte’ என்னும் பெயரில் எட்டு பாகங்கள் கொண்ட போட்காஸ்ட் ஒன்றை நடத்தினார்.
இந்நிலையில், சென்ற மாதம் கேண்டேஸ் மீது மேக்ரான் தம்பதியர் அமெரிக்காவின் டெலாவேர் மாகாணத்தில் அவதூறு வழக்குத் தொடர்ந்தார்கள்.
அவர் மீது அவதூறு உட்பட 22 குற்றச்சாட்டுகள் பதிவு செய்யப்பட்டுள்ளதுடன், இழப்பீடும் கோரப்பட்டுள்ளது.
வழக்குத் தொடர்ந்தது ஏன்?
மேக்ரான் தம்பதியர் இந்த வழக்கு குறித்து இதுவரை மௌனம் காத்துவந்த நிலையில், கேண்டேஸ் மீது வழக்குத் தொடர்ந்தது எதனால் என்பதற்கு முதன்முறையாக விளக்கமளித்துள்ளார் பிரான்ஸ் ஜனாதிபதி இமானுவல் மேக்ரான்.
சில விடயங்களை மறைக்கமுயன்றால், உண்மையாகவே அப்படி இருக்குமோ என மக்கள் எண்ணத் துவங்கிவிடுவார்கள். அது கூடுதல் கவனத்தை ஈர்க்கத் துவங்கிவிடும். அதற்கு Streisand effect என்று பெயர்.
ஆகவே, அப்படி ஒரு நிலை ஏற்படவேண்டாம் என்பதற்காக தாங்கள் கேண்டேஸ் மீது வழக்குத் தொடராமல் விட்டதாகத் தெரிவித்துள்ள மேக்ரான், ஆனால், அந்த விடயம் அளவுக்கு மீறி கவனம் ஈர்த்துவருவதைத் தொடர்ந்து அது குறித்து விளக்கமளிக்கவேண்டிய கட்டாயம் ஏற்பட்டதாகத் தெரிவித்துள்ளார்.
அமெரிக்காவில் இந்த விடயம் பெரும் பிரச்சினையாகியுள்ளதால் நாங்கள் அதற்கு விளக்கமளிக்கவேண்டியதாயிற்று என்று கூறியுள்ள அவர், அது உண்மை மதிக்கப்படுவதைக் குறித்தது என்றும் கூறியுள்ளார்.
கேன்டேஸுக்கு, தான் போலியான தகவல்களைப் பரப்புவது நன்றாகத் தெரிந்திருந்தும், பாதிப்பை ஏற்படுத்துவதற்காகவே, தன் கொள்கைகளை பரப்பும் நோக்கில், வலதுசாரித் தலைவர்களுடன் கைகோர்த்து அதைச் செய்தார் என்றும் கூறியுள்ளார் மேக்ரான்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |