கவிழ்ந்த பிரான்ஸ் அரசு... அடுத்து என்ன? அரசியல் கட்சித் தலைவர்களை சந்திக்கும் மேக்ரான்
பிரான்சில் பிரதமர் மிஷெல் பார்னியேர் அரசு கவிழ்ந்ததைத் தொடர்ந்து, அடுத்து அரசு அமைக்கப்போவது யார் என்ற கேள்வி எழுந்துள்ளது.
கவிழ்ந்த பிரான்ஸ் அரசு...
வரி விதிப்புகளும், சலுகைக் குறைப்புகளும் கொண்ட தனது பட்ஜெட்டை பிரதமர் மிஷெல் பார்னியேர் பிரான்ஸ் அரசியலமைப்பின் 49.3 வது பிரிவின் கீழ் சிறப்பு அதிகாரங்களைப் பயன்படுத்தி தாக்கல் செய்தார்.

ஆனால், உடனடியாகவே இடதுசாரிக் கட்சியான France Unbowed (LFI) மற்றும் Marine Le Penஇன் வலதுசாரிக் கட்சியான National Rally (RN) ஆகிய கட்சிகள், பிரதமருக்கெதிராக நம்பிக்கையில்லாத் தீர்மானம் கொண்டுவந்தன.
நம்பிக்கையில்லாத் தீர்மானத்தில் பார்னியேர் தோல்விடைந்ததால் பிரான்ஸ் அரசு கவிழ்ந்தது.
அடுத்து என்ன?
இந்நிலையில், அடுத்த அரசை அமைப்பது குறித்து திட்டமிடுவதற்காக, இன்று மதியம் 2.00 மணியளவில், ஜனாதிபதி இமானுவல் மேக்ரான், பிரான்ஸ் அரசியல் கட்சித் தலைவர்களை சந்திக்கிறார்.

இதில் ஒரு குறிப்பிடத்தக்க விடயம் என்னவென்றால், பொதுவாக மேக்ரான் கட்சித் தலைவர்களை தனித்தனியாக சந்திப்பதுதான் வழக்கம்.
ஆனால், இம்முறை, மேக்ரான், கட்சித்தலைவர்கள் அனவரையும் ஒரே நேரத்தில் எலிசி மாளிகையில் சந்திக்க இருப்பது குறிப்பிடத்தக்கது.
| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். | 
 
                 
                 லங்காசிறி FM
                                லங்காசிறி FM
                             
                                                 
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
        