இவரால் எங்கள் தனிப்பட்ட வாழ்க்கை பாதிக்கிறது! மனைவியுடன் பிரான்ஸ் ஜனாதிபதி மாக்ரோன் புகார்
பிரான்ஸ் ஜனாதிபதி மக்ரோன் மற்றும் அவரது மனைவி Brigitte ஆகியோர் புகைப்படக்காரர் எதிராக புகார் அளித்துள்ளனர்.
புகைப்படக்காரர் Thibaut Daliphard மீதே பிரான்ஸ் ஜனாதிபதி தம்பதி புகார் அளித்துள்ளனர்.
புகைப்படக் கலைஞர் Thibaut Daliphard, பிரான்ஸ் ஜனாதிபதி மாளிகையான Élysée அரண்மனைக்கு வெளியே செப்டம்பர் 8ம் திகதி முதல் இரண்டு வாரங்களுக்கு மாக்ரோன் உட்பட பிரான்ஸ் ஜனாதிபதிகளின் சுற்றுலா தள புகைப்படங்களை காட்சிப்படுத்தியுள்ளார்.
இதில், கடந்த ஆண்டு எடுக்கப்பட்ட மாக்ரோன் நீச்சலுடையில் இருக்கும் புகைப்படத்தையும் Thibaut Daliphard காட்சிப்படுத்தியுள்ளார்.
Élysée அரண்மனையிலிருந்து புறப்படும் போது மற்றும் உள்ளே நுழையும் போது காட்சிப்படுத்தப்பட்டிருந்து புகைப்படத்தை பார்த்து மக்ரோன் மற்றும் அவரது மனைவி Brigitte ஆகியோர் அதிருப்தியடைந்துள்ளனர்.
இந்நிலையில், சில நாட்களுக்கு முன் புகைப்படக்காரர் Thibaut Daliphard-ன் செயல் தங்களின் தனிப்பட்ட வாழ்க்கையை பாதிப்பதாக ஜனாதிபதி மக்ரோன் மற்றும் அவரது மனைவி Brigitte ஆகியோர் புகார் அளித்துள்ளனர்.
இந்த புகார் தொடர்பில் அடுத்த வாரம் முதற்கட்ட விசாரணைக்கு ஆஜராகுமாறு Thibaut Daliphard-க்கு சம்மன் அனுப்பப்பட்டுள்ளது.
2017 ஆம் ஆண்டு இதே போல் Thibaut Daliphard மீது புகார் அளித்த மாக்ரோன், பின் சில நாட்களில் அதை திரும்பப் பெற்றார் என்பது குறிப்பிடத்தக்கது.