பிரான்சில் எரிவாயு விநியோகம் உறுதி செய்யப்படுமா? மக்ரோன் எடுத்துள்ள திடீர் முடிவு
Macron going to Persian Gulf to secure energy supply: எரிபொருள் விநியோகத்தை கட்டுப்படுத்தும் விதமாக வளைகுடா நாடுகளுக்கு சுற்றுப்பயணம் மேற்கொள்ள இருப்பதாக பிரான்ஸ் ஜனாதிபதி இம்மானுவேல் மக்ரோன் தெரிவித்துள்ளார்.
வளைகுடா நாடுகளுக்கு சுற்றுப்பயணம்
மத்திய கிழக்கில் நடைபெற்று வரும் தொடர் போர் நடைமுறைகள் காரணமாக உலக அளவில் எரிசக்தி விலைகள் கடுமையாக உயர்ந்துள்ளது.
இந்நிலையில் பிரான்ஸில் எரிபொருள் மற்றும் இயற்கை எரிவாயு விநியோகத்தை உறுதி படுத்தும் நோக்கில், வளைகுடா நாடுகளுக்கு திங்கட்கிழமை முதல் அரசுமுறைப் பயணம் மேற்கொள்ள இருப்பதாக பிரான்ஸ் ஜனாதிபதி இம்மானுவேல் மக்ரோன் தெரிவித்துள்ளார்.
நாட்டு மக்களுக்கு தொலைக்காட்சி வாயிலாக உரையாற்றிய இம்மானுவேல் மக்ரோன், பிரான்ஸ் நேரடியாக பங்கேற்காத போர் நடைமுறையின் விளைவாக பிரான்ஸ் மக்களும் மிகுந்த நெருக்கடியை எதிர்கொண்டு வருகின்றனர்.

மேலும் தினசரி வாழ்க்கை செலவினங்கள் மற்றும் விலைவாசி உயர்வை கட்டுப்படுத்த அரசு முன்னெடுக்கும் நடவடிக்கைகள் மற்றும் நடைமுறை சார்ந்த முடிவுகளை பிரான்ஸ் மக்கள் எதிர்பார்ப்பதை முழுமையாக நான் உணர்ந்து இருக்கிறேன் என்று தெரிவித்துள்ளார்.
பொதுமக்களின் வாங்கும் திறனையும், வாழ்வாதாரத்தையும் பாதுகாப்பது முதன்மையான தேவையாகும். இந்த சிக்கல்களை தீர்க்க அரசு தீவிரமான முயற்சிகளை செய்து வருவதாக மக்ரோன் தெரிவித்துள்ளார்.
நாட்டின் பொருளாதார ஸ்திரத்தன்மை பாதுகாப்பதே தன்னுடைய அரசின் முதன்மையான முன்னுரிமை என்று சுட்டிக்காட்டியுள்ளார்.