கமெராவைக் கண்டதும் மேக்ரான் மறைத்த பொருள்: பரபரப்பாகியுள்ள இணையம்
பிரான்ஸ் ஜனாதிபதி இமானுவல் மேக்ரான், பிரித்தானிய பிரதமர் கெய்ர் ஸ்டார்மர், ஜேர்மனியின் புதிய சேன்ஸலரான பிரெட்ரிக் மெர்ஸ் முதலானோர் உக்ரைன் சென்றிருந்தார்கள்.
உக்ரைன் தலைநகர் கீவ்விலிருந்து அவர்கள் ரயிலில் திரும்பிக்கொண்டிருக்கும் நிலையில், அவர்கள் மூவரும் போதைப்பொருள் ஒன்றை மறைத்ததாக ஊடகவியலாளர் ஒருவர் பரபரப்புக் குற்றச்சாட்டு ஒன்றை முன்வைக்க, இணையத்தில் பரபரப்பு தொற்றிக்கொண்டுள்ளது.
ஆதார வீடியோ
DEVELOPING SCANDAL: Macron, Starmer, and Merz caught on video on their return from Kiev. A bag of white powder on the table. Macron quickly pockets it, Merz hides the spoon. No explanation given. Zelensky, known cocaine enthusiast, had just hosted them. All three of the “leaders”… pic.twitter.com/M2h5Fhzo5h
— Alex Jones (@RealAlexJones) May 11, 2025
சர்ச்சைக்கு பேர் போனவரான அலெக்ஸ் ஜோன்ஸ் என்னும் அந்த ஊடகவியலாளர், தனது குற்றச்சாட்டுக்கு ஆதாரமாக வீடியோ ஒன்றை சமூக ஊடகமான எக்ஸில் நேற்று வெளியிட்டுள்ளார்.
அந்த வீடியோவில், கமெராவைக் கண்டதும், மேசை மேலிருக்கும் வெள்ளையான ஒரு பொருளை மேக்ரான் எடுத்து தன் பாக்கெட்டில் மறைத்துவைக்க, மெர்ஸ் ஸ்பூன் ஒன்றை எடுத்து மறைத்துவைத்ததாக குற்றம் சாட்டியுள்ளார் ஜோன்ஸ்.
மூவரும் போதையிலிருப்பதுபோல் தோன்றுவதாகவும் பரபரப்புக் குற்றச்சாட்டு ஒன்றை ஜோன்ஸ் முன்வைக்க, இணையம் பரபரப்பாகியுள்ளது.
விளக்கமளித்த பிரான்ஸ் தரப்பு
இந்நிலையில், பிரான்ஸ் நாட்டு ஊடகங்கள் அந்த வீடியோ தொடர்பில் விளக்கமளித்துள்ளன.
மேக்ரான் எடுத்த பொருள் வெறும் டிஷ்யூ காகிதம் என்றும், மெர்ஸ் எடுத்தது ஸ்பூன் அல்ல, அது காபியைக் கலக்க பயன்படுத்தும் குச்சி என்றும் Libération என்னும் பிரெஞ்சு ஊடகம் தெரிவித்துள்ளது.
இணையத்தில் வெளியாகியுள்ள அந்த வீடியோ தொடர்பில் மக்கள் பலரும் ஜோன்ஸுக்கு ஆதரவாகவும், எதிராகவும் பலவிதத்தில் கருத்துக்களைத் தெரிவித்துவருகிறார்கள்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |