ஹிந்தி மொழியில் பேசும் மேக்ரான்... பெரும் கவனம் ஈர்த்துள்ள வீடியோ
பிரான்ஸ் ஜனாதிபதி இமானுவல் மேக்ரான் ஹிந்தி மொழியில் பேசும் வீடியோ ஒன்று பெருமளவில் கவனம் ஈர்த்துவருகிறது.
பெரும் கவனம் ஈர்த்துள்ள வீடியோ
பிரான்சிலுள்ள Évian-les-Bains என்னுமிடத்தில் G7 உச்சி மாநாடு நடைபெற்ற விடயம் அனைவரும் அறிந்ததே.

அமெரிக்க ஜனாதிபதியான ட்ரம்ப் முதலான தலைவர்கள் அந்த மாநாட்டில் பங்கேற்ற நிலையில், ட்ரம்ப், அமெரிக்கா - ஈரான் ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டது முதலான பல முக்கியமான நிகழ்வுகள் அந்த மாநாட்டின்போது நடைபெற்றன.
ஆனால், அவற்றையும் தாண்டி, இந்தியா பிரான்சுக்கிடையிலான நட்பு அந்த மாநாட்டில் மேலோங்கி நின்றதை உலமே வேடிக்கை பார்த்துக்கொண்டிருக்கிறது.
#WATCH | Prime Minister Narendra Modi and French President Emmanuel Macron visited an exhibition at VivaTech 2026 in Paris, France, earlier today
— ANI (@ANI) June 18, 2026
VivaTech is Europe's foremost gathering of technology and innovation.
(Source: DD) pic.twitter.com/pNAtg6y3O2
அதற்கு மகுடம் வைத்தாற்போல் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார் பிரான்ஸ் ஜனாதிபதி இமானுவல் மேக்ரான். மேக்ரான் ஹிந்தியில் பேசும் அந்த வீடியோ இணையத்தில் பெருமளவில் கவனம் ஈர்த்துவருகிறது.
#WATCH | French President Emmanuel Macron speaks in Hindi as he bids farewell to Prime Minister Narendra Modi after the conclusion of his visit to France
— ANI (@ANI) June 18, 2026
(Source: Elysee Palace via XP Division, MEA) pic.twitter.com/af3dgAiQFV
ப்ரிய மித்ர நரேந்திர’, அதாவது, அன்பு நண்பர் நரேந்திர மோடி, என ஹிந்தியில் பேசத் துவங்கும் மேக்ரான், உங்களை பிரான்சுக்கு வரவேற்றதில் நான் மிக்க மகிழ்ச்சி அடைந்தேன், பிரான்சுக்கும் இந்தியாவுக்கும் இடையிலான நட்பு நீண்ட காலம் வாழட்டும் என ஹிந்தியிலேயே கூறுகிறார்.
அத்துடன், நான் சரியாகத்தான் ஹிந்தியில் பேசினேன் என்று நினைக்கிறேன் என வேடிக்கையாகவும் ஆங்கிலத்தில் கூறிய மேக்ரான், உங்கள் நட்புக்காக நன்றி, பிரான்ஸ் உங்களை நேசிக்கிறது, இந்தியா திரும்பும் முன் இத்தனை நண்பர்களுடன் பாரீஸில் இருந்தது எனக்கு மிக்க மகிழ்ச்சியை உருவாக்கியது என்றும் கூறியுள்ளார்.
| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |