ட்ரம்பை வெளிப்படையாக அவமதித்த பிரான்ஸ் ஜனாதிபதி மேக்ரான்
அமெரிக்காவை நம்புவதை விட சீனாவை நம்பலாம் என்னும் ரீதியில் பேசி வெளிப்படையாகவே ட்ரம்பை அவமதித்துள்ளார் பிரான்ஸ் ஜனாதிபதியான இமானுவல் மேக்ரான்.
ட்ரம்பை வெளிப்படையாக அவமதித்த மேக்ரான்
உக்ரைன் சிக்கலில் இருக்கும் நேரத்தில், உதவி செய்யவேண்டிய அமெரிக்கா வரிவிதிப்புகளை செய்துகொண்டிருக்கிறது.
அதுவும், மற்ற நாடுகளை விட்டு விட்டு, கனடா, மெக்சிகோ, ஐரோப்பா என கூட்டாளர் நாடுகள் மீதே அமெரிக்கா வரிகள் விதிக்கிறது.
ஆக, அமெரிக்காவை நம்புவதை விட சீனாவை நம்பலாம் என்னும் ரீதியில் பேசியுள்ளார் மேக்ரான்.
உக்ரைன் விவகாரத்தில் உதவவேண்டிய நேட்டோ நாடான அமெரிக்கா உதவி செய்யாமல் ஒதுங்கிக்கொள்ள, கடந்த சில மாதங்களாக உக்ரைன் அமைதிக்காக சீனா ரஷ்யாவுடன் பேச்சுவார்த்தைகள் நடத்திக்கொண்டிருக்கிறது.
எனவே, உக்ரைன் அமைதியில் சீனா பெரும் பங்காற்றமுடியும் என்று நினைக்கிறேன் என்றும் கூறியுள்ளார் மேக்ரான்.
வரிவிதிப்புகளைப் பொருத்தவரை, ஐரோப்பா அமெரிக்காவுக்கு தக்க பதிலடி கொடுக்கும் என்றும் கூறியுள்ளார் மேக்ரான்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |