பரபரப்பாகும் பிரான்ஸ் பிரதமர் இல்லம்: அடுத்த பிரதமர் இவரா?
பிரான்சின் அடுத்த பிரதமர் இன்னும் சற்று நேரத்தில் அறிவிக்கப்படலாம் என எதிர்பார்க்கப்படும் நிலையில், பிரதமர் இல்லத்தில் சிவப்புக் கம்பளம் முதலான விடயங்கள் தயாராவதாக பிபிசி ஊடகம் தெரிவித்துள்ளது.
அடுத்த பிரதமர் இவரா?
பிரான்ஸ் ஜனாதிபதி இமானுவல் மேக்ரான், இன்று பிரான்ஸ் பிரதமர் பெயரை அறிவிக்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
பிரான்ஸ் பிரதமர் இல்லம் பரபரப்பாக புதிய பிரதமரை வரவேற்கத் தயாராகிக்கொண்டிருப்பதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.
இந்நிலையில், போலந்துக்கு அரசு முறைப்பயணமான சென்றிருந்த மேக்ரான், தன் பயணத்தை முன்கூட்டியே முடித்துக்கொண்டு நேற்று பிரான்ஸ் திரும்பியுள்ளார்.
நேற்று இரவே அவர் புதிய பிரதமரின் பெயரை அறிவிப்பார் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், இன்று காலை அந்த அறிவிப்பை வெளியிட உள்ளதாக அவர் பின்னர் தெரிவித்துள்ளார்.
இதற்கிடையில், Democratic Movement கட்சியைச் சேர்ந்தவரான François Bayrou (73) என்பவரை எலிசி மாளிகையில் சந்தித்து சுமார் ஒன்றேமுக்கால் மணி நேரம் பேசியுள்ளார் மேக்ரான்.
ஆக, பிரான்சின் அடுத்த பிரதமராக, François Bayrou தேர்ந்தெடுக்கப்படலாம் என்னும் எதிர்பார்ப்பு நிலவிவருகிறது.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |