ட்ரம்பை முந்திக்கொண்டு பிரித்தானியாவுக்கு வரும் நாடொன்றின் தலைவர்: பலருக்கும் தெரியாத தகவல்
அமெரிக்க ஜனாதிபதி ட்ரம்புக்கு மன்னர் சார்லஸ் பிரித்தானியாவுக்கு வர அழைப்பு விடுத்துள்ள விடயம் பெரும்பாலானோர் அறிந்ததே.
அதன்படி, ட்ரம்ப் செப்டம்பர் மாதம் பிரித்தானியாவுக்கு அரசு முறைப்பயணமாக வருவார் என எதிர்பார்க்கப்படுகிறது.
ஆனால், பலருக்கும் தெரியாத ஒரு தகவல், ட்ரம்புக்கு முன், பிரான்ஸ் ஜனாதிபதி இமானுவல் மேக்ரான் பிரித்தானியா வர உள்ளார் என்னும் தகவல்!
ட்ரம்பை முந்திக்கொண்டு பிரித்தானியாவுக்கு வரும் மேக்ரான்
ஆம், உக்ரைன் போர், மற்றும் ட்ரம்ப் அமெரிக்க ஜனாதிபதியானது, ஆகிய விடயங்களைத் தொடர்ந்து, ஐரோப்பாவுக்கும் அமெரிக்காவுக்கும் இடையே ஒரு மறைமுக போட்டி உருவாகியுள்ளதை பலரும் கவனித்திருக்கலாம்.
ஆக, பல விடயங்களில் ஐரோப்பிய நாடுகள் ட்ரம்பை ஓரம் கட்ட முயற்சிப்பதைக் காணமுடிகிறது.
அவ்வகையில், ட்ரம்ப் செப்டம்பர் மாதம் பிரித்தானியாவுக்கு அரசு முறைப்பயணமாக வருவார் என எதிர்பார்க்கப்படும் நிலையில், அவர் பிரித்தானியா வருவதற்கு முன், பிரான்ஸ் ஜனாதிபதி இமானுவல் மேக்ரான் பிரித்தானியா செல்ல முடிவு செய்துள்ளார்.
விடயம் என்னவென்றால், மேக்ரானின் அரசு முறைப்பயணம் குறித்த தகவல், பிரித்தானிய அரசு மற்றும் அரண்மனை அதிகாரிகளில் சிலருக்கு மட்டுமே தெரியுமாம்.
ஆக, ட்ரம்ப் செப்டம்பரில் பிரித்தானியா வரும் நிலையில், மேக்ரானோ, அடுத்த மாதம், அதாவது, மே மாத இறுதியில் பிரித்தானியா வர உள்ளார் என தகவல் கசிந்துள்ளது!
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |