உக்ரைன் போர், உலக பொருளாதாரம் குறித்து விவாதித்த மேக்ரான்! இந்திய பிரதமர் வெளியிட்ட பதிவு
உக்ரைன் - ரஷ்யா போரினால் உலக உணவுப் பாதுகாப்பு மற்றும் உலகப் பொருளாதாரத்தில் சரிவு குறித்து மேக்ரான் - மோடி விவாதம்
தனது நண்பர் மேக்ரானுடன் உரையாடியதாக பதிவிட்ட இந்திய பிரதமர் மோடி
பிரான்ஸ் ஜனாதிபதி இம்மானுவல் மேக்ரான், இந்திய பிரதமர் நரேந்திர மோடியுடன் பல உலகளாவிய பிரச்சனைகள் குறித்து விவாதித்தார்.
நேற்றைய தினம் பிரான்ஸ் ஜனாதிபதி இம்மானுவல் மேக்ரான் மற்றும் இந்திய பிரதமர் நரேந்திர மோடி இருவரும் சர்வதேச உறவுகள், இருதரப்பு உறவுகளை புதுப்பித்தல் குறித்து தொலைபேசியில் விவாதித்துள்ளனர்.
PC: Twitter/@narendramodi
இந்த உரையாடலில் உலகளாவிய உணவுப் பாதுகாப்பு, புவிசார் அரசியல் சவால்கள், பாதுகாப்பு ஒத்துழைப்பு திட்டங்கள், பொதுப் பயன்பாட்டுக்கான அணுசக்தி ஒத்துழைப்பு குறித்து விவாதிக்கப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், உக்ரைன் - ரஷ்யா போரினால் உலக உணவுப் பாதுகாப்பு மற்றும் உலகப் பொருளாதாரத்தில் சரிவு போன்ற பல பிரச்சனைகள் குறித்து இரு நாட்டு தலைவர்களும் கவலை தெரிவித்ததாகவும் கூறப்பட்டுள்ளது.
PC: PTI
இதுதொடர்பாக இந்திய பிரதமர் நரேந்திர மோடி வெளியிட்டுள்ள பதிவில், 'இன்று (நேற்று) எனது நண்பர் ஜனாதிபதி இம்மானுவல் மேக்ரானுடன் பேசினேன். பேரழிவு தரும் காட்டுத்தீயைக் கையாள்வதில் பிரான்சுக்கு இந்தியா தனது ஒற்றுமையை உணர்த்தியது.
இந்தியா-பிரான்ஸ் மூலோபாய கூட்டுறவின் கீழ் நடந்து வரும் இருதரப்பு ஒத்துழைப்பு மற்றும் உலகளாவிய மற்றும் பிராந்திய முக்கியத்துவம் வாய்ந்த பிற பிரச்சனைகள் குறித்து நாங்கள் விவாதித்தோம்' என தெரிவித்துள்ளார்.
Spoke to my friend President @EmmanuelMacron today. Conveyed India’s solidarity with France in dealing with the devastating wildfires. We discussed ongoing bilateral cooperation under the India-France Strategic Partnership, and other issues of global and regional significance.
— Narendra Modi (@narendramodi) August 16, 2022