என் மனைவி பெண்தான் என்பதற்கான அறிவியல்பூர்வ ஆதாரம் வெளியிடப்படும்: மேக்ரான்
பிரான்ஸ் ஜனாதிபதியான இமானுவல் மேக்ரான், தனது மனைவி பெண்தான் என்பதற்கான அறிவியல்பூர்வ ஆதாரத்தை வெளியிட இருப்பதாக அவரது சட்டத்தரணி தெரிவித்துள்ளார்.
மேக்ரான் மனைவியை ஆண் என விமர்சிக்கும் பெண்
கேண்டேஸ் ஓவன்ஸ் (Candace Owens) என்னும் அமெரிக்கப் பெண், ஒரு தொலைக்காட்சி பிரபலம் மற்றும் அரசியல் விமர்சகரும் ஆவார்.
இந்த கேண்டேஸ், மேக்ரானின் மனைவியான பிரிஜிட் மேக்ரானை கேலி பேசுவதையே வழக்கமாகக் கொண்டவர்.

பிரான்சில் மீண்டும் கிளம்பிய மேக்ரான் எதிர்ப்பு! கூடப்போகும் ஒரு மில்லியன் பேர்.. அச்சத்தில் பொலிஸார்
குறிப்பாக, பிரிஜிட் பெண் அல்ல, அவர் ஆணாகப் பிறந்தவர், அவர் ஒரு திருநங்கை என கேண்டேஸ் கூறுவதுண்டு. அதற்காகவே அவர் ’Becoming Brigitte’ என்னும் பெயரில் எட்டு பாகங்கள் கொண்ட போட்காஸ்ட் ஒன்றை நடத்தினார்.
அறிவியல்பூர்வ ஆதாரம்
வெளியிடப்படும் இந்நிலையில், மேக்ரான் தம்பதியர், பிரிஜிட் பெண்தான் என்பதற்கான அறிவியல்பூர்வ ஆதாரத்தை வெளியிட திட்டமிட்டுள்ளதாக அவர்களுடைய சட்டத்தரணியான டாம் கிளேர் என்பவர் தெரிவித்துள்ளார்.
மேக்ரான் தம்பதியர் உலக வரலாற்றில் முக்கியத்துவம் வாய்ந்தவர்களாக இருந்தும், அவர்களும் மனிதர்கள்தானே என்று கேட்கும் டாம், ஆனால், அவர்களுடைய அடையாளம் குறித்து பொய்யான விடயங்களைப் பரப்புவது அவர்களையும் வருத்தமடையச் செய்யும்தானே என்கிறார்.
பிரிஜிட் தனது முந்தைய திருமணம் மூலம், ஏற்கனவே மூன்று பிள்ளைகளுக்குத் தாயானவர் ஆவார்.
ஆக, அவர் கர்ப்பமாக இருந்தபோது எடுக்கப்பட்ட புகைப்படங்கள் மற்றும் அறிவியல்பூர்வ ஆதாரங்கள் சிலவற்றை பிரிஜிட் மேக்ரான் தம்பதியர் வெளியிடப்படக்கூடும் என எதிர்பார்க்கப்படுகிறது.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |