அமெரிக்கர்களுக்கும் ஐரோப்பியர்களுக்கும் நாட்டை திறந்துவிடும் மேக்ரான்: பிரித்தானியர்களுக்கு...
இந்த கோடையின்போது, தடுப்பூசி போட்டுக்கொண்ட அமெரிக்கர்களையும் ஐரோப்பியர்களையும் நாட்டுக்குள் அனுமதிப்பது தொடர்பாக திட்டமிட்டுவருவதாக பிரான்ஸ் ஜனாதிபதி இமானுவல் மேக்ரான் தெரிவித்துள்ளார்.
தடுப்பூசி போட்டுக்கொண்ட அல்லது கொரோனா இல்லை என்பதை உறுதி செய்யும் ஆவணம் வைத்திருக்கும் சில சுற்றுலாப்பயணிகளையாவது இந்த கோடையின்போது பாரீஸில் பார்க்க விரும்புவதாக அவர் தெரிவித்துள்ளார்.
ஐரோப்பிய நாடுகளுக்குள் பயணம் செய்யும் வகையில் சான்றிதழ் ஒன்றை உருவாக்கும் முயற்சியில் தனது அரசு இறங்கியிருப்பதாக தெரிவித்துள்ள மேக்ரான், அதில் பிரித்தானியாவுக்கும் இடம் உள்ளதா என்பதை தெளிவுபடுத்தவில்லை.
மேலும், அர்ஜெண்டினா, சிலி, தென்னாப்பிரிக்கா மற்றும் பிரேசில் ஆகிய நான்கு நாடுகளிலிருந்து வருவோருக்கு கடுமையான கட்டுப்பாடுகளை விதிக்க பிரான்ஸ் தயாராகி வருகிறது.
அத்துடன், இந்த கட்டுப்பாடுகள் விதிக்கப்படும் நாடுகளின் பட்டியலில் மேலும் நீளமாகலாம் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.