பிரான்ஸில் மாணவனால் கொல்லப்பட்ட பெண் ஆசிரியர்..மேக்ரான் வெளியிட்ட பதிவு
பிரான்ஸில் 16 வயது மாணவரால் பெண் ஆசிரியர் கொல்லப்பட்ட சம்பவம் குறித்து ஜனாதிபதி இமானுவல் மேக்ரான் பதிவிட்டுள்ளார்.
அதிர்ச்சி சம்பவம்
தென்மேற்கு பகுதியான Saint-Jean-de-Luz பகுதியில் 53 வயதான பெண் ஆசிரியர், 16 வயது மாணவரால் கத்தியால் குத்தப்பட்டதால் உயிரிழந்தார்.
இந்த சம்பவம் பெரும் அதிர்வலையை ஏற்படுத்தியது. இதுகுறித்து உடனடியாக நடவடிக்கை எடுத்த பொலிஸார், குறித்த மாணவரை கைது செய்து விசாரித்து வருகின்றனர்.
குறித்த மாணவர் மன அழுத்தம் தொடர்பான சிகிச்சையில் இருந்ததாக சக மாணவர்கள் தெரிவித்தனர்.
@Gaizka Iroz / AFP - Getty Images
ஜனாதிபதி வெளியிட்ட பதிவு
இந்த நிலையில், ஜனாதிபதி இமானுவல் மேக்ரான் இந்த சம்பவம் குறித்து கருத்து தெரிவித்துள்ளார். அவர் வெளியிட்டுள்ள பதிவில்,
'Saint-Jean-de-Luz-யில் ஒரு ஆசிரியையின் கொலை நம்மை தீவிர உணர்ச்சியில் நிரப்புகிறது. எதிர்கால சந்ததியினருக்கு அறிவை கடத்துவதற்காக தங்கள் வாழ்க்கையை அர்ப்பணிக்கும் அவரது, சக ஊழியர்கள், அவரது மாணவர்கள், நம் ஆசிரியர்கள் ஆகியோரின் வலியை நான் பகிர்ந்து கொள்கிறேன். தேசம் உங்கள் பக்கம் இருக்கிறது' என தெரிவித்துள்ளார்.
@AP